பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்460
தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் இலது என்பதே உண்மை. அதனால்தான் உளதுஎனில் என்றார். முன் நூற்பாவில் தமிழறிவற்ற வேந்தனைத் தாழ்த்திக் கூறிய இவர் இதில் தெய்வத்திற்கே தமிழுணர்ச்சி இல்லாதிருக்குமானால் அது பேயைவிட இழிந்ததே எனக் கூறுகிறார். இந் நூலாசிரியரின் தாய்மொழிப்பற்று இவற்றால் குன்றிலிட்ட விளக்காய் வெளிப்படுகிறது.
தமிழ்மொழி தன்னை நன்கு கற்றால் மனிதர்களையே தேவர்களின் தேவராகச் செய்துவிடும் என்பார் இவர். “அத்தனை யொத்துத் தவத்தோர் பலர்க்கும் அரசன் என்னும் வித்தகப் பேர்பெற்று வீறார் பொதியையில் மேயமுனி முத்தம் ஒப்பாள்அரு ளாற்செய்ததுஆம் தமிழ் மூதுலகத்து எத்தக வோரையும் தேவர்தம் தேவர் எனச்செய்யுமே.”3 இவ்வாறு கூறுவதாலேயே தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் இருக்க முடியாது எனத் தெளிவாகிறது.
31.வண்ணப் பனுவலும் வகுக்கும் பாவலன்
 சொல்லில் அருள்வலித் தோற்றம் இலையேற்
 பல்வகைத் துயரால் பரதவிப் பானே.
முழுவதும் சந்தக்கவிகளாலேயே இயலும் ஒலியலந்தாதி போன்ற அரிய நூல்களை இயற்றும் திறமை படைத்திருந்த போதிலும் ஒரு கவிஞரின் வாக்கில் அருள்வலிமை இல்லாவிட்டால் அவர் பலவாறு வருந்துவார் என்றவாறு.
தமிழர் பொதுவாகக் கவிஞர் தம் பாடலால் பல அதிசயங்களை நிகழ்த்தமுடியும் எனநம்புகிறார்கள். பண்டைய தமிழ்ப் புலவர்களைப் பற்றி வழிவழியாக வழங்கிவரும் பற்பல சரிதங்களே இதற்குக் காரணம். இராம காதையை உலகப் பெருங்காப்பியமாக இயற்றித்தந்த கல்வியிற் பெரிய கம்பரைக் கூட அதற்காக மதிப்பதைவிட அரவந் தீண்டிய தில்லைவாழ் அந்தணச் சிறுவனை எழுப்பியதாகவும், கலைதகளையே ஓர் இடைச்சியாக வந்து திமுதம் என்ற சொல்லைப் பயன்படுத்தச்