பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்462
பெரும்பான்மையோராகிய பாமரர்களைக் குறித்தார். உயர்ந்தோர் நிலை அடுத்த நூற்பாவில் கூறப்படும்.
33.செத்தார் உய்யினும் தீஞ்சுவை இல்லாப்
 பாடலின் மருளாப் பான்மையர் சிலரே.
ஒரு பாடலைப் பாடி ஒருவன் இறந்தவரையே எழுப்பிக் காட்டினாலும் அது இலக்கியநயம் மிக்கதாக இல்லாமல் இருப்பின் சற்றும் மயங்காத தன்மையை உடையவர்கள் எண்ணிக்கையில் மிகச்சிலரே ஆவர் என்றவாறு.
கவிதையின் இலக்கியத்தரத்தைச் சரியாக மதிப்பிடும் சுவைஞர்கள் சிலரே என்று இங்கு கூறியவர் ஏழாமிலக்கணத்தில் தகுதிவாய்ந்த கவிஞர்களின் எண்ணிக்கையும் குறைவானதே என்னும் உண்மையை, “பாவலர் புகழ்ந்தும் பாமரர் இகழக் கண்டு வாடுறும் கவிஞர்சிற் சிலரே”1 என வெளிப்படுத்தியுள்ளார்.
“செத்தவர்மீண்டு எழச்செய்யும் திறலுடைப்பாட்டு ஆனாலும், கைத்தசுவை யினதாகில் பழிப்பாரும் சிலர் இருப்பார்; சுத்தமில்பாட்டு ஆனாலும் சொன்னபடி யேநடவில் இத்தரையில் புகழ்கின்றோர் எண்ணரும்பற் பலர்தாமே.”2 என்றதுவும் இது.
34.வாக்குச் சுவையுடன் அருள்திறம் மன்னும்
 புலமைத் தேற்றம் பொதிய மால்வரைக்
 கடவுள்மா முனிவனைக் கைதொழில் வருமே.
பொதியமலையில் என்றும் விளங்குபவராகிய தெய்வத் தன்மை பொருந்திய அகத்தியரை வணங்கனிால் கவிதையினிமை, அருள்தன்மை ஆகிய இரண்டாலும் சிறந்து விளங்கும் புலமையை அடையலாம் என்றவாறு.
பழைய தொல்காப்பியப் பதிப்புகளில் காப்புச் செய்யுளாகச் கொடுக்கப்பட்டுள்ள, “சந்தனப் பொதியத் தடவரைச்