செய்வதா என நையாண்டி செய்கிறார். அவர்களுக்குத் தமிழ் அபிமானமோ, மரபைப்போற்றும் நேர்மையோ இருக்காது என்பது இவர் துணிபு. எனவேதான் சோழன் வழுதி அன்ன மன்னர் என்றார். காலவேற்றுமையால் இவர் காலத்திற்கு முன்னமேயே சேரநாட்டில் தமிழ் வழக்கொழிந்து விட்டாதல் சேரமன்னரைக் கூறவில்லை. |
மூளி ஆக்கான் என்பதற்குக் காதுகொய்தல் முதலாகக் கூறப்படும் உறுப்புக் குறைத்தலைப் பொருளாகக் கூறாமல் அத் துட்டப்புலவனின் அகந்தையை அழித்தல் எனப்பொருள் கூறியது இந் நூலாசிரியன் தலைமையான தனிமுதற் கொள்கையாகிய சீவ காருணியம் பற்றியாகும். “கல்விப் பெரும் பயன் கருணை என்னும் நல்விற் பனனே நாவலர்க்கு இறையே”1 என்பது இவர் வாக்கு. ஆணவத்தின் மொத்த வடிவமாகத் தருக்கித் திரியும் ஒருவனை முறைப்படித் தோற்கடித்து அவர் அகந்தையைக் குறைத்துவிட்டால் அது அவரை மூளியாக்கியதற்குச் சமம்தான். இது அடுத்த நூற்பாவில் கூறப்படும். |
43. | தோல்வி ஏற்றுத் தொழும்ஒரு புலவன் | | காது கொய்தலும் காரியம அன்றே. |
|
இலக்கியப் போட்டியில் தம் தோல்வியை ஒப்புக்கொண்ட ஒருவர் வணக்கம் செலுத்தியபிறகுவென்றவர் தம் வெற்றிக்கு அறிகுறியாகத் தோற்றவரின் செவியை அறுப்பதால் பயன் ஒன்றும் இல்லை என்றவாறு. |
“வெண்பாத் தோல்வியில் விருதுஇழப் பதுவும் வண்ணத் தோல்வியில் வார்செவி இழப்பதும் பழமை யாம்எனல் பல்லோர் வழக்கே”2 “பாடும் திறமையிற் பழுதுபட் டோரை மற்றவர் புடைக்கச் செய்து புகழ்வது தக்க பான்மை என்று உரைப்பது தரமே”3 என்றெல்லாம் இவர் கூறுவதால் புலமை |
|