பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்532
இடம் பெற்றுள்ளன. ஆனால் அதற்கும் இதற்கும் அடிப்படையான ஒரு வேற்றுமை உண்டு. ஒரு புலவன் தன் வாக்குப் பலிதத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்குச் சான்றாகக் கவிஞர் பெற்ற வெற்றிகள் மட்டுமே மரபியல்பில் பட்டியலிட்டுக் காட்டப்பெற்றன. ஆனால் எத்தகையவனாயினும் இறைவன் திருவருள் துணைசெய்யாவிட்டால் தோல்வியடையநேரும் என விளக்கிச் செருக்கை ஒடுக்குவதற்காகப் பெரும் புலவர்களின் தோல்விகள் இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.
புலவர்கள் ஓரிருமுறை திருவருள் துணையால் பெரும் வெற்றிகளைக் கண்ட அளவில் தாமே பெரியோர் என்னும் இறுமாப்புற்றுத் தெய்வத் துணையை மறந்து வழிபாட்டில் ஊக்கம் குன்றிவிடக் கூடாது னஎன உணர்த்துவதற்காக இப்பிரிவு இடம் பெறுகிறது. இதனைத்தான் முன் தோற்றுவாயில் அறிவு உறும் பொருட்டே என்றார்.
புலமையிலக்கணத்தின் இறுதிப் பிரிவாகிய இது பதினொரு நூற்பாக்களை உடையது,
134.பற்பலர் செவிகவர் பாவலன் தன்கைக்
 கொடுவாள் அருணைக் கோபுரத்து இழந்து
 தன்செவி ஒருவன் தரப்பெற் றானே,
பல புலவர்களை வாதத்தில் வென்று அவர் காதுகளை அரிந்த வில்லிபுத்தூராழ்வார், பின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரிடம் தோல்வியுற்றுத் தம் வாளையும் இழந்து மாற்றானின் கருணையினால் தம் செவிகளை இழக்காமல் தப்பினார் என்றவாறு,
இவ் வரலாறு 508ஆம் நூற்பா உரையில் கூறப்பட்டது. இங்கு வில்லிபுத்தூராரின் தோல்வியைச் சுட்டிச் கூறுவதைக் கொண்டு இவ் வாசிரியருக்கு அருணகிரிநாதரிடமுள்ள அபிமான மிகுதியால் மற்றவரை இழிவாகக் கருதுகிறார்.