பக்கம் எண் :
 

செய்யுளியல் 'தரவொன்று தாழிசை'

107

 
  14 வார்புன லிழிகுருதி யகலிட முடனனைப்பக்
கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்;
இது தரவு.
 
'முரசதிர் வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த 15 மறமல்லர்
அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ.

'கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க
வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோர்வு
மாணாதா ருடம்போடு மறம்பிதிர 16வெதிர்மலைந்து
சேணுய ரிருவிசும்பிற் சிதைத்ததுநின் சினமாமோ.

'படுமணி யினநிரை பரந்துட னிரிந்தோடக்
கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு
வெரிநாடு 17மருப்பொசிய 18வீழ்ந்துதிறம் வேறாக
எருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ.
 
இவை மூன்றும் தாழிசை.
 
  'இலங்கொளி மரகத மெழின்மிகு வியன்கடல்
வலம்புரித் 19தடக்கை மாஅல் நின்னிறம்.

'விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய் புரையு நின்னுடை.
 
இவை 20ஈரடி யிரண்டு அம்போதரங்கம்.
 
'கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை
தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை
ஒலியிய லுவண மோங்கிய கொடியினை
வலிமிகு சகட மாற்றிய வடியினை.
 
(14) இவை 21நாற்சீ ரோரடி நான்கு அம்போதரங்கம்.
 
'போரவுணர்க் கடந்தோய் நீ
புணர்மருதம் பிளந்தோய் நீ
 

     (14) நாற்சீர் ஓரடி நான்கு என்றவை இங்கே இரண்டாக வந்தன.
 

     (பி - ம்.) 14 வார்புனன் மார்பினில். 15. மறமன்னர். 16. வெதிர் கலங்கிச்
17. மருப்பொடிய. 18. வீழ்ந்ததுதன் திறம்வேறா. 19. தடக்கையின் மாய. 20. இரண்டும்
பேரெண். 21. அளவெண்.