இதன் பொழிப்பு : ஒரு தரவு வந்தும், தரவு இரண்டாய் வந்தும், தாழிசை சில வந்தும், தாழிசை பல வந்தும். தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்னும் ஆறுறுப்பும் தம்முள் மயங்கியும், வெண்பாவினோடும் ஆசிரியத்தினோடும் மயங்கியும் வருவன எல்லாம் (1) கொச்சகக்கலிப்பாவாம் எ - று. |
'சொல்லின் முடிவின் அப்பொருண் முடித்தல்' என்பது தந்திர வுத்தி யாகலான் தரவு கொச்சகம் 1முதலாகிய ஐந்து கலிப்பாவும் (2) அப்பெயரானே வழங்கப்படும் எனக் கொள்க. |
['தாமும்' என்று சிறப்பித்தவதனால் தனிச்சொல்லும் சுரிதகமும் இடையிட்டு வரப்பெறுமெனக் கொள்க.] |
'மரபே' என்று சிறப்பித்தவதனால் வரலாற்று முறைமையோடுங் கூட்டிக் கலிக்கு ஓதப்பட்ட ஆறுறுப்பும் மிக்குங் குறைந்தும் பிறழ்ந்தும் உறழ்ந்தும் மயங்கியும் வண்ணமும் அடியும் தொடையும் மயங்கியும் கலியுள் வாராவென்ற நேரீற்று இயற்சீரும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரும் ஐஞ்சீரடியும் வந்து ஒத்தாழிசைக் கலிப்பாவினோடு ஒவ்வாது வேறுபட்டு வருவனவெல்லாம் கொச்சகக் கலிப்பா என்று வழங்கப்படும் எ-று. |
'வாங்கமைத்தோள் அரவு ஏர் அகல் அல்குல் அம்பேர் நெடுங்கண் வம்பேறு கொங்கை குரவே கமழ் குழலாய்' எ - து. மகடூஉமுன்னிலை. |
|
(1) கொச்சகம் : 'பல கோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப; அது போலச் சிறியவும் பெரியவும் விராய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் செய்யப்படும் பாட்டதனைக் கொச்சகம் என்றார். இக்காலத்தார் அதனைப் பெண்டிர்க்குரிய உடையுறுப்பாக்கியும் கொய்ச்சகம் என்று சிதைத்தும் வழங்குப' (தொல். பொருள். சூ. 464, பேரா.) (2) அவற்றுள் ஒரு தரவு வந்தால் தரவு கொச்சகக் கலிப்பா என்றும், தரவு இரண்டு வந்தால் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்றும், சில தாழிசை வந்தால் சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும், பல தாழிசை வந்தால் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா என்றும்' தரவு, தாழிசை முதலாகிய ஆறு உறுப்பும் தம்முள் மயங்கியும் வெண்பாவினோடும் ஆசிரியத்தோடும் மயங்கியும் வருவன வெல்லாம் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்றும் வழங்கப்படும். |
|
(பி - ம்.) 1. முதலாவுடையனவெல்லாம். |