| | படைப்பரிமான் றோரினொடும் பரந்துலவு மறுகினிடைக் கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே. |
இதுதரவு. |
ஆங்கொருசார், |
இது தனிச்சொல். |
| | 'உச்சியார்க் கிறைவனா யுலகெலாங் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூட் புரந்தரனாப் பாவித்தார் 3வச்சிரங் காணாத காரணத்தான் மயங்கினரே. |
| ஆங்கொருசார், |
| | 'அக்கால மணிநிரைகாத் தருவரையாற 4பகைதவிர்த்து வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார் 5சக்கரங் காணாத காரணத்தால் சமழ்த்தனரே. |
| ஆங்கொருசார், |
| | 'மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார் வேல்கண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே. |
இவை மூன்றுந் தாழிசை. |
| அஃதான்று, |
இது தனிச்சொல். |
| | 'கொடித்தே ரண்ணல் கொற்கைக் கோமான் நின்றபுக ழொருவன் செம்பூட் சேஎய் என்றுநனி யறிந்தனர் பலரே தானும் ஐவரு ளொருவனென் றறிய லாகா மைவரை யானை மடங்கா வென்றி மன்னவன் வாழியென் றேத்தத் தென்னவன் வாழி திருவொடும் பொலிந்தே.' |
இது சுரிதகம். |
|
கொண்ட பகை. சமழ்த்தனர் - நாணினர். செங்கோல் - சிவந்த அம்பு ஐவருள் ஒருவன் ;ஐவர் - மும்மூர்த்திகள், முருகன். இந்திரன். |
|
(பி - ம்.) 3. வச்சிரங்கைக். 4. பிணிதவிர்த்து. 5. சக்கரங்கைக் |