| | நீர்பூத்த நிரையிதழ்க்க ணின்றொசிந்த புருவத்தோள் பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால். 'கனைவரல்யாற் றிகுகரைபோற் கைநில்லா துண்ணெகிழ்ந்து நினையுமென் னிலைகண்டும் நீங்கலனே யென்றியால். 'கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைதுணை பிறிதின்றிப் புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால். 'வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கலாத் தாழுமென் னிலைகண்டும் தாங்கலனே யென்றியால். |
இவை ஆறும் ஈரடித் தாழிசை. |
| அதனால், |
இது தனிச்சொல். |
| | 'அடும்பம லிறும்பி னெடும்பனை மிசைதொறுங் கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு. 'செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர் நெறிதரு புரவியின் மறி தருந் திமில். 'அரைசுடை நிரைபடை விரைசெறி முரசென நுரைதரு திரையொடு கரைபொருங் கடல். 'அலங்கொளி ரவிச்சுட ரிலங்கொளி மறைதொறுங் கலந்தெறி காலொடு புலம்பின பொழில். |
இவை நான்கும் அராகம். |
| | 'விடாஅது கழலுமென் வெள்வளையுந் 13தவிர்ப்பாய்மன் கெடாஅது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ. 'ஒல்லாது கழலுமென் னொளிவளையுந் 14தவிர்ப்பாய்மன் நில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ. 'தாங்காது கழலுமென் றகைவளையுந் 15தவிர்ப்பாய்மன் நீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ. 'மறவாத வன்பினேன் மனனிற்கு மாறுரையாய் துறவாத தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய். 'காதலார் 16 மார்பன்றிக் காமக்கு மருந்துரையாய் ஏதிலார் தலைசாய யானிற்கு மாறுரையாய். |
|
(பி - ம்.) 13-15. செறிப்பாய்மன். 16. மார்பின்றிக் |