பக்கம் எண் :
 
130

யாப்பருங்கலக் காரிகை

 
     'சிந்தடி நான்கு அறைதரு காலை விருத்தம்' எ - து. முச்சீரடி  நான்காய்
வருவது வஞ்சிவிருத்தம் எனப்படும் எ - று.
 
'சிந்தடி நான்காய் 2வருவது வஞ்சிய
தெஞ்சா விருத்த மென்மனார் புலவர்'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 92.)
 

வரலாறு

  'சோலை யார்ந்த சுரத்திடைக்
காலை 3யார்கழ லார்ப்பவும்
மாலை மார்பன் வருமாயின்
நீல வுண்க ணிவள்4வாழும்.'

['இருது வேற்றுமை .......கையினாய்.']

(கா. 13, மேற்.)

     இவை சிந்தடி நான்காய் வந்தமையான் வஞ்சிவிருத்தம்.
 

     'தனிச்சொல் வந்து மறைதலில் வாரத்தினால் இறும் வஞ்சி' எ - து குறளடி
வஞ்சிப்பாவும் சிந்தடி வஞ்சிப்பாவும் தனிச் சொற் பெற்று, ஆசிரியச் சுரிதகத்தால்
இறும் எ - று.
 
     'மறைதலில் வாரம்' என்று சிறப்பித்தவதனால் வஞ்சிப்பா ஆசிரியச் சுரிதகத்தால்
இறுவது அல்லது வெள்ளைச் சுரிதகத்தால் இறப்பெறாதெனக் கொள்க.
 
'தூங்க லிசையன வஞ்சி மற்றவை
ஆய்ந்த தனிச்சொலோ டகவலி னிறுமெ'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 90.)
 

வரலாறு

  'பூந்தாமரை...........பெருவண்மையனே'

(கா. 9. மேற்.)
 

என்னும் குறளடி வஞ்சிப்பா நாளுமென்னும் தனிச்சொற் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால்
இற்றதெனக் கொள்க.
 
  '(1) கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன
வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன
 

     (1) கொடி வாலன - நீண்ட வால்களை யுடையன. குருநிறத்தன - மிக்கதிறத்தன.
உளையன - பிடரிமயிரை யுடையன. பணை எருத்தின் - பருத்த
 

     (பி - ம்.) 2. வருவன வஞ்சி எஞ்சா. 3. யார்ந்த கழலார்ப்ப. 4. வாழுமே.