பக்கம் எண் :
 
152

யாப்பருங்கலக் காரிகை

 

வரலாறு

ஆசிரியப்பா

  ' (2) எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்க லன்ன பாறை யேறிக்
கொடுவில் லெயினர் பகழி மாய்க்குங்
கவலைத் தென்பவவர் தேர்சென்ற வாறே
அதுமற் றவலங் கொள்ளாது
2நொதுமற் கழறுமிவ் வழங்க லூரே.

(குறுந். 12)
 

      இந்நேரிசை யாசிரியப்பாவினுள், 'எறும்பி யளையிற் குறும்பல் சுனைய' என்பது
 இயற்றளை வெள்ளடி. அதனை,
 

குறள் வெண்பா

  'எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
குறுந்தொடி யாஞ்செல் சுரம்'
 
என்று உச்சரித்து வெள்ளடியாமாறு கண்டுகொள்க.
 
  ' (3) 3இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம்
உடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித்
தாமே யாண்ட வேமங் காவலர்
இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
காடு பதியாகப் போகித் தத்தம்
நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தோரே
அதனால்,
நீயுங் கேண்மதி யந்தை வீயா
துடம்பொடு நின்ற வுயிரு மில்லை
 

     (2) எறும்பி அளையின் - எறும்பின் வளைகளைப் போல. உலைக்கல் -
கொல்லனது உலைக்களத் துள்ள பட்டடைக்கல். பகழி மாய்க்கும் கவலைத்து -
அம்புகளைத் தீட்டுதற்கு இடமாகிய கவர்த்த வழிகளை யுடையது. நொதுமல் கழறும் -
அயற்றன்மையையுடைய சொற்களைக் கூறி இடித்துரைக்கும். அழுங்கல் - ஆரவாரம்.

      (3) உடைமரத்தின் இலை மிகச் சிறியது. மடங்கல் - யமன். வெள்ளில் - பாடை.
வியலுள் - அகன்ற இடத்தின்கண். விலங்குபலி - மாறுபட்ட பிச்சை. மிசையும் -
உண்ணும்.
 

     (பி - ம்.) 2. நொதுமலர்க் கழறும். 3. இருங்கடற் றானையொடு பெருநிலங்கவைஇ.