பக்கம் எண் :
 

 ஒழிபியல் 'எழுத்துப் பதின்மூன்'

199

 
     ஐந்து இழுக்கில் அடியாவன : (1) குறளடி, (2) சிந்தடி, (3) அளவடி, (4) நெடிலடி,
(5) கழிநெடிலடி என இவை.
 
     தொடை நாற்பத்து மூன்றாவன : அடிமோனை, அடியியைபு, அடியெதுகை,
அடிமுரண், அடியளபெடை என ஐந்தும், அந்தாதித் தொடை இரட்டைத் தொடை
செந்தொடை என மூன்றும், இணைமோனை முதலாகிய விகற்பத் தொடை
முப்பத்தைதும் என இவை.
 
     ஐந்து பாவாவன : (1) வெண்பா, (2) ஆசிரியப்பா, (3) கலிப்பா, (4) வஞ்சிப்பா, (5)
மருட்பா என இவை.

     இனம் மூன்றாவன : (1) தாழிசை, (2) துறை, (3) விருத்தம் என இவை.

     ஒழுக்கிய வண்ணங்கள் நூறு ஆவன : குறிலகவற்றூங்கிசை வண்ணம் முதலாயின.

     ஒன்பது ஒண் பொருள்கோள் ஆவன : நிரனிறை மொழி மாற்று முதலாயின.

     இருமூ வழுக்கில் விகாரம் ஆவன : வலிக்கும் வழி வலித்தன் முதலாயின.
 
     வனப்பு எட்டாவன : அம்மை முதலாயின. 'யாப்புள் வகுத்தனவே' எ - து;
யாப்பருங்கலக் காரிகையுட் சொல்லப்பட்டன எ - று.

     ஏகாரம் ஈற்றசை ஏகாரம்.

     'ஐந்து இழுக்கிலடி' என்று சிறப்பித்தவதனால், திணை வழுவும், பால்வழுவும்,
மரபுவழுவும், வினாவழுவும், செப்பு வழுவும், காலவழுவும், இடவழுவும்,
என்றுரைக்கப்பட்ட ஏழு வழுவும் படாமற் புணர்க்கப்படும் எனக் கொள்க.

     'ஒழுக்கிசை வண்ணங்கள் நூறு' என்று சிறப்பித்தவதனால் ஒருசாராசிரியர்
வண்ணம் இருபதெனச் சொன்னார் எனக் கொள்க.

     'ஒன்பது ஒண் பொருள்கோள்' என்று சிறப்பித்தவத