பக்கம் எண் :
 

செய்யுளியல் 'ஈரடி வெண்பாக்' 

73

 
     கண் ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு இரு விகற் பத்தானும்
ஒரு விகற்பத்தானும் வருவனவும் உள ; அவை ஒருசா ராசிடை நேரிசை வெண்பா
எனக் கொள்க.
 

வரலாறு

  (7) ' தாமரையின் றாதாடித் தண்டுவலைச் சேறளைந்து
தாமரையி னாற்றமே தானாறும் - தாமரைபோற்
கண்ணான் முகத்தான் கரதலத்தான் சேவடியெங்
கண்ணார்வஞ் செய்யுங் கருத்து.'

(8) 'கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா - 4ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியுமே லஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.'

(நாலடி. 250)

     இவை 5இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக் கேற்ற
தனிச்சொல்லாய் இடை வேறுபட்டு முறையே இரண்டசை யானும் ஓரசையானும் ஆசிட்டு
இரண்டு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசைவெண்பா.

 

  (9) 'ஆர்த்த வறிவின ராண்டிளைய ராயினும்
காத்தோம்பித் தம்மை யடக்குப - மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற்
போத்தறார் புல்லறிவி னார்.'

(நாலடி. 351)
 

  (10) ' வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானுமவன்
வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
 

     (7) துவலை - துளி. சேவடி நாறும்.

      (8) கருமம் - பொருளீட்டும் தொழில்கள். உள்படா - உள்பட்டுச் செய்து. துவ்வா
- நுகர்ந்து. செய்யா - செய்து. அறம் பொருள் இன்பம் மூன்றும் கூறப்பட்டன.
பட்டினம் - கடற்கரையூர்.

      (9) ஆர்த்த - மனத்தின்கண் பிணிப்புண்ட, ஆண்டு - பிராயம். முத்தொறும் -
முதிருந்தோறும். எருவை - நாணல் சாதி. போத்து - உட்புரை ; உள்ளே கூடாது
இருப்பது.

      (10) வஞ்சியேன் - வஞ்சி என்னும் ஊரினேன் ; வஞ்சளை செய்யேன் என்பது
குறிப்புப் பொருள். வஞ்சியாய் - பெண்ணே. வஞ்சியார் கோ - வஞ்சி நகரில்
உள்ளவர்களுக்குத் தலைவன்; சேரன் என்றபடி.
 

     (பி - ம்) 4. ஒருமுறையே 5. முதற் குறட் பாவினோடு தனிச் சொல்லிடை
வேறுபட்டு நின்று இரண்டசை.