| திரண்டு துணியா யிடைநனி 7போழ்ந்தும் நிரந்தடி நான்கின நேரிசை வெண்பா' |
என்றார் காக்கைபாடினியார். |
| ['உருவுகண் டெள்ளா வுடையார் குறண்மட வாய்தடமண் டரிய வரைகீண் டிருகுற ணேரிசை தாமரையின் கருமமு மார்த்தவும் வஞ்சியுங் காமர் தனிச்சொன்முன்னா நெரிநுண் கருங்குழ னேரிழை யாசிட்ட நேரிசையே.' |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே குறள்வெண்பாவிற்கும், இருகுறணேரிசை வெண்பாவிற்கும், ஆசிடை நேரிசைவெண் பாவிற்கும் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.] (3) |
|
(பி - ம்.) 7. போழ. |
- - - |
இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா |
| 24. ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல் இன்றி நடப்பினஃ தின்னிசை துன்னு மடிபலவாய்ச் சென்று 1நிகழ்வது பஃறொடை யாஞ்சிறை வண்டினங்கள் துன்றுங் கருமென் குழற்றுடி யேரிடைத் தூமொழியே. |
இ - கை. இன்னிசை வெண்பாவும் பஃறொடை வெண்பாவு மாமாறு உணர்த்....று. 'ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடியாய்த் தனிச்சொல் இன்றி நடப்பின் அஃது இன்னிசை துன்னும்' எ - து, ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் வந்து நான்கடியாய்த் தனிச் சொலின்றி நடப்பின் அஃது இன்னிசை வெண்பா எனப்படும் எ-று. |
வரலாறு |
| (1) 'வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகற்றம் வாணாள்மேல் வைகுதல் 2வைகலை வைத்துணரா தார்.' |
(நாலடி. 39) |
|
1. வைகலும் வைகல் - நாள்தோறும் கழிவு. வைகலை - நாட்களை. வைகும் என்று - கழியும் என்று. பொழுது போக்கலை இன்புறவாகக் கருதுவர் என்றபடி. |
|
(பி - ம்.) 1. நிகழ்வ. 2. வைகலும். |