'தன்னிகரில்லா...யுடையதாய்' என்பது தன்னோடு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதானை நாயகனாக வுடைத்தாய் என்றவாறு.
'பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்' என்பதனால் , தன்னில் உயர்ந்தார் இல்லாதானென்றும் கொள்ளப்பட்டதாயிற்று.
'மலைகடல்...புனைந்து' என்பது மலைவருணனையும், கடல் வருணனையும் நாட்டு வருணனையும் , நகர வருணனையும் , இருது வருணனையும் ஆதித்தோதய வருணனையும் சந்திரோதய வருணனையும் என்று இன்னோரன்ன வருணனை யுடைத்தாய் என்றவாறு.
'நன்மணம்.....நன்னடைத்தாகி' என்பது இன்னோரன்ன செய்கைச் சிறப்புப் புகழ்ந்து தொடுக்கப்பட்ட நல்லொழுக்க முடைத்தாய் என்றவாறு.
1 'இன்னன' என்றதனால் பல வருணனைகளையு முடைத்தாய் வருவதெனக் கொள்க.
'மந்திரம்...தொடர்ந்து' என்பது மந்திரமிருத்தலும் , தூது விடுத்தலும் , மேற்செலவும் , செருச்செய்கையும் , வென்றி யெய்தலும் சந்திபோலத் தொடரப்பட்டு என்றவாறு.
'சந்தி' என்பது நாடகத்தே நிலைபெறுதலான் , ஈண்டு அது போலவெனக் கூறப்பட்டது . 2அஃதாவது வித்தல் , விளைத்தல் விளைவு துய்த்தல் என்பது போல்வது.
'சருக்கம்....விளங்கி' என்பது சருக்கம் என்றாதல் , இலம்பகம் என்றாதல் , பரிச்சேதம் என்றாதல் பாகுபட்டு விளங்கி என்றவாறு.
'நெருங்கிய....விரும்ப' என்பது எட்டுவகைப்பட்ட சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்பும் இடைவிடாமற் கேட்போர் மதிக்க என்றவாறு.
'கற்றோர்.....தென்ப' என்பது இவ்வகைத்தாகப் புலவராற் புனையப்படுந் தன்மையை யுடைத்தென்பர் ஆசிரியர் என்றவாறு.
'நாற்பொருள் பயக்கும் நடை' என்பது அகமும் , அகப்புறமும் , புறமும் , புறப்புறமும் , பயந்தநடை யென்றுமாம்.
வி-ரை:தன்னிகரில்லாத் தலைமை யுடையோன் எனில் , அவனுக்கு அழகு , இளமை , புகழ் , ஆண்மை , ஆக்கம் , ஊக்கம் , அருள் , பிரதாபம், கொடை , குலம் முதலிய குணங்கள் இருக்கவேண்டும் என்பர் சாகித்யதர்ப்பணத்தின் நூலாசிரியர் . இவையனைத்தும் ஒருங்கு இருப்பதே அரிது; அதிலும் அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாது இருத்தல் அதனினும் அரிது . அங்ஙனம் இருப்பினும் 'அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியங்கால் , இன்மை அரிதே வெளிறு' என்பதனாலும் , 'பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் , ஆகுதல் மாணார்க் கரிது ' என்பதனாலும் , 'அரம்போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர் , மக்கட்பண் பில்லா தவர் ' என்பதனாலும் ஓரிரு தீக்குணமேனும் ஒரோவழி இல்லாதிருத்தல் அரிது . ஆதலின் தன்னிகரில்லாத் தலைவனை ஒரு காப்பியம் தலைவனாகக்
1. 'நன்னடைத்தாகி ' என்றதனான் என்பதும் பாடம்.
2. 'அவையாவன வித்து , முளை தழைத்தல் , விளைவு துய்த்தல் என இவை போல்வன ' என்பதும் பாடம்.