பக்கம் எண் :
 
248தண்டியலங்காரம்

படுமாயினும், இவை வெவ்வேறு சிறப்புப் பெயர் உடையவாய் உலகில் உண்டாகின்றன ஆதலால், சொல்லின் முடியும் இலக்கணத்தால் அவ்வாறு சொல்லப்பட்டது என்றற்கும் இவ்வாறு முறைபிறழச் சொல்லப்பட்டது எனினும் அமையும்.

சொல்லின் முடியும் இலக்கணம் ஆண்டு யாதோ? எனின், ஒப்பினான் ஆகிய பெயரும், குணங்காரணமாகிய பெயரும் குறித்து உரைக்கப்படுதலான் அப்பொருளே உணர்ந்து கொள்ளப்பட்டது.

அஃதேல், மாலைமாற்றும், சுழிகுளமும், கோமூத்திரியும், சருப்பதோபத்திரமும் என நான்குமேயன்றே ஆண்டு ஆசிரியனால் வடநூலில் உரைக்கப்பட்டன. ஈண்டு உரைத்தனவாகிய ஒழிந்த மிறைக்கவிகள் மிகைபடக் கூறிற்றாம் பிறவெனின், ஆகா; ஒழிந்தன, 'ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்' என்னும் தந்திரவுத்தியால் உரைக்கப்பட்டன. அல்லதூஉம், இது வடநூலுக்கு வழிநூல் ஆதலால் தனது விகற்பம்பட உரைத்தான் எனினும் அமையும் என்னை?,

'முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூ லாகும்'

(நன்னூல் - 7)

என்றாராகலின் என்க.

(35)

சொல்லணியியல் முற்றிற்று.

 தண்டியலங்காரம் மூலமும் பழைய உரையும் நிறைவுற்றது.