பூசுதும், வேங்கைமரத்தின்கீழ் விளையாடுதும்’ என்னும்: அதற்குச் செய்யுள்:
குறியிடங் கூறல்
‘வந்திணங் காமன்னர் தேயமுன் னாள்மழை யேறுயர்த்த
கந்தணங் காமத யானைக் கழல்மன்னன் கார்ப்பொதியிற்
சந்தனஞ் சாந்துசெங் காந்தளம் பூத்தழல் போல்விரியும்
கொந்தணங் கீர்ம்பிண்டி யாம்விளை யாடுங் குளிர்பொழிலே’ (161)
‘காந்தளம் போதெங் கருங்குழற் போது கடையலொன்னார்
தாந்தளர்ந் தோடவை வேல்கொண்ட வேந்தன்தண்ணம் பொதியில்
சாந்தமெஞ் சாந்தம் விளையா டிடமுந் தளையவிழும்
பூந்தளம் பிண்டி எரிபோல் விரியும் பொழிலகமே.’’
(162)
குறிஞ்சிநிலமாகையான் இவ்வகை சொல்லும். அல்லாத
நிலத்திற்கும்
அவற்றிற்குத் தக்கவாறே சொல்லும். இவ்வகை சொல்ல, ‘ஒக்கும், ‘‘இவை
செய்துவந்து நின்மின்’’ என்றது போலும், என உணர்ந்து, பிற்றை ஞான்று
அப் பூக்கொண்டு சூடி, அச் சாந்து பூசி, அம் மரத்தின்கீழ் விளையாடற்
குறிசெய்து நிற்கும்; நின்றவிடத்து அவனது வரவு உணர்ந்து தோழி
சொல்லும்; அதற்குச் செய்யுள்:
வரவுணர்ந்து வரைதல்
‘அணிநிற மாப்பக டுந்திவந் தார்வல்லத்
தன்றவியத்
துணிநிற வேல்கொண்ட கோன்கொல்லிச் சாரலிச் சூழ்பொழில்வாய்
மணிநிற மாமயில் என்னைகொல் பொன்னேர் மலர்ததைந்த
கணிநிற வேங்கையின் மேல்துயி லாது கலங்கினவே.’
(163)
‘கயில்கொண்ட வார்கழற் போர்மன்னர் ஓடக் கடையற்கண்சேந்
தயில்கொண்ட கோனரிகேசரி கொல்லி அருவரைவாய்ப்
பயில்வேண்டும்தேனும்பண்1போல முரலும்பைம் பூம்பொழில்வாய்த்
துயில்கொண் டிலதுணை யோடுமன்2னோசெய்ய தோகைகளே.’ (164)
இவ்வாறு தலைமகனது வரவுணர்ந்து, தோழி, ‘குவளை
அலர்ந்தனவேற் காண்பாம், 3பந்தர் முல்லை அரும்பினவேற் காண்பாம்’
எனச் சொல்லித், தலைமகளைக் கொண்டுபோதரும்; அதற்குச் செய்யுள்:
(பாடம்) 1. போல்முரல் வேங்கைப் பசும்பொழில் வாய்த்.
2. என்செய்தன. 3. பரந்த.
|