பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 113
 

      இனிக் கருவிக் கருத்தன் என்பது-வாள் எறியும், சுரிகை குற்றும்,
இம் மிடா நாற்குறுணி அரிசிச் சோறு அடும் என இத்தொடக்கத்தன;
 
      இனிக்,
கருமக் கருத்தன் என்பது-திண்ணை மெழுகிற்று, கலங்
கழுவிற்று, மரங் குறைத்தது என்று சொல்லுவது.

      ‘
அறியக் கிடந்த இடம்’ என்னும் அச்சொல் கருமக்கருத்தனாய்
நின்றது என்பது,

      அஃதேயெனின், இவ்வகை கருமக்கருத்தனாகச்’ சொல்லுதற்கு
இலக்கணமுண்டோ எனின், உண்டு;

      ‘
செயப்படு பொருளைச் செய்தது போலத்
      தொழிற்படக் கிளத்தலும் வழக்கியல் மரபே’ (வினையியல்-49)
என்பது.

       அஃதேயெனின், குறியெனப்படுவ என்றாகாதே சூத்திரஞ்
செயற்பாலது; என்னை, இரவுக்குறி பகற்குறி என்று இரண்டு
சொல்லுகின்றமையின். அஃதன்றி இடம் என்னும் ஒருமை நோக்கிக்
‘குறியெனப்படுவது’ என்றார் என்பது.                             (18)

                        
 சூத்திரம்-19

                இரவுக் குறியே இல்வரை இகவாது.

என்பது என்னுதலிற்றோ எனின், மேற்சூத்திரத்துட் குறி இரண்டென்றார்,
அவற்றுள் இரவுக்குறி நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

      
இதன் பொருள்: இரவுக் குறி என்பது-இரவின்கட் குறியிடம்
என்றவாறு; இல்வரை இகவாது என்பது-இல்லிடத்தைவிட்டு நீங்காது
என்றவாறு.

  எனவே, புறத்தன்று என்றவாறாம்.
      
‘இரவுக் குறியே இல்வரை இகவா
       துணர உணர்த்த உரையி னான’
என்றார் பிறரும் எனக்கொள்க.

       இரவின்கட்குறி இல்வரை இகவாது எனப், பகற்குறி இல்வரை
இகக்கும் என்பது சொல்லினார்; என்னை, இராப்புள் உண்ணா என்றார்க்கு,
பகற்புள் உண்ணும் என்பது முடிந்தது; இனி, இராக்குறி யென்று ஆகற்பாலது இரவுக்குறி யென்றாயிற்றுச் செய்யுளாகலான்.