பக்கம் எண் :
 
124இறையனார் அகப்பொருள்

       ‘இவளே நின்னல திலளே யாயும்
       குவளை உண்கண் இவளல திலளே
       யானும் ஆயிடை யேனே
       மாமலை நாட மறவா தீமே.’


    இவ்வகை ஓம்படுத்துத் தான் தவிரும் என்றவாறு.


    தான் தவிர்வதோ செயற்பாலது? போகாளோ? எனின், தனது
வருத்தத்திற்குக் கவன்று போகாதாளல்லள், இதனைப் பண்பாக
உரைத்தற்பொருட்டுத் தவிரும் என்பது. செவிலித்தாய்க்கு உரைத்தாளன்றே,
அவள் அதனைப் பண்பாக உரையாளோ எனின், இவள் சொல்லியது
தெளியுமாறு செவிலித்தாய் சொல்லியது தெளியார் என்றவாறு; என்னை?
எப்பொழுதுங் கைவிடாத மரபின ளாகலான் என்பது.
இனித், தலைமகளைத் தலைமகன் ஆற்றுவித்துக் கொண்டு சென்றதற்குச்
செய்யுள்:

                  
மெல்லக் கொண்டேகல்

  ‘பண்தான் அனையசொல் லாய்பைய ஏகு பறந்தலைவாய்
  விண்டார் படச்செற்ற கோன்வையை சூழ்வியன் நாட்டகம்போல்
  வண்டார் பொழிலும் மணியறல் யாறும் மருங்கணைந்து
  கண்டார் மகிழுந் தகைமைய தியாஞ்செல்லுங் கானகமே.’     (180)

  ‘சிறியபைங் கட்களி றூர்ந்துதென் பாழியிற் செற்றெதிர்ந்தார்
  மறியவை வேல்கொண்ட தென்னவன் வையைநன் னாட்டகம்போல்
  முறியபைம் போதுகள் மேல்வண்டு பாடி முருகுயிர்க்கும்
  நறியபைங் கானநை யாது நடக்கவென் நன்னுதலே.’         (181)


       ‘1அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
       வழிபடு தெய்வங் கட்கண் டாஅங்கு
       அலமரல் வருத்தம் தீர யாழநின்
       நிலமென் பணைத்தோள் எய்தினம் ஆகலிற்
       பொரிப்பூம் புன்கின் எழிற்றகை ஒண்முறி
       சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி
       நிழல்காண் தோறும் நெடிய வைகி
       மணல்காண் தோறும் வண்டல் தைஇ
       வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே
       மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்
       நறுந்தண் பொழில கானம்
       குறும்ப லூரயாஞ் செல்லும் ஆறே.’          (நற்றிணை, 9)


  
(பாடம்) 1. அழிவில.