| 
     
                              
     
     சூத்திரம்-28
 தந்தை தன்னையர் ஆயிரு வீற்றும்
 முன்னம் அல்லது கூற்றவண் இல்லை.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், தந்தைக்கும் தன்னையன் மார்க்கும் நற்றாய் அறத்தொடு நிற்குமாறு 
     உணர்த்துதல் நுதலிற்று.
 
     
     இதன் பொருள்: தந்தை தன்னையர் ஆயிரு வீற்றும் 
     என்பது-தந்தை என்றும் தன்னையன்மார் என்றும் சொல்லப்பட்ட இரண்டு கூற்றார்க்கும் என்றவாறு; 
     முன்னம் அல்லது கூற்று அவண் இல்லை என்பது-அவர்க்கு முன்னத்தானல்லது செவ்வனஞ் சொல்லப்பெறாள் 
     என்றவாறு.
 
     
     அஃதாமாறு: நற்றாய் தந்தைக்கும் தன்னையன்மார்க்கும் 
     அறத்தொடு நிற்குமிடத்து, இன்னதொன்றுண்டால், அஃது என்னோ எனின், குலத்தானும் குணத்தானும் 
     செல்வத்தானும் மிக்கான் ஒருவன், உலகத்தாரெல்லாம் ஒரு குறை வேண்டப்படுந் தன்மையன், தான் 
     ஒருவர்பால் ஒரு குறை வேண்டுஞ் சிறுமையானல்லன், இத்தன்மையானவன் நம்மை வழிபட்டு 
     வாழலுறும், அவனை யாம் கிழமைகொள்ள அழிவதுண்டோ?’ என்னும்; என அதுகேட்டு, அவர் என கருதுபவோ 
     எனின், ‘இவள் கருதிச் சொல்லுகின்ற குறிப்பாவது இதுபோலும், தன்மகள் திறத்தினாகாதே’ 
     என உணர்வாராவது.
 
     
     ‘அவண்’ என்ற மிகைவாய்பாட்டான், முன்னத்தானன்றியும்
 முன்னம்போலுஞ் சொல்லானும் சிறுபான்மை சொல்லப்பெறும் என்பது.
 
 அது வருமாறு: தலைமகன் பார்ப்பாரை முன்னிட்டு
 அருங்கலங்களோடு வரைவுவேண்டி விட்ட இடத்துத் தந்தையும்
 தன்னையன்மாரும் வரைவு மறுத்தார், மறுப்பார் சூழ்தலும் அருகுதலும்
 உடைமையான், நூற்றியாட்டைக் கருமம் நூற்றவரோடு எண்ணிச்
 செய்யப்படுமாகலாற் சூழப்படும்.
 
 இனிக், ‘கண்டீரே, தம்மகளை வேண்டுவாரைப் பார்த்திருந்
 தாராகாதே, நாம் இந் நூற்றிடைக் கருமநூற்றவரே, இவர்களிடை
 மகட்பெறுவார் யார்!’ எனவும், ‘பெறுதற்கு அருமையுடைத்து’ எனவும் கருத
 அருகுப.
 
 இனிக், ‘கண்டீரே, தம் மகளை வேண்டுவார் உரைப்பனவும்
 பொய்போலும்’ வேண்டுதற்கு இடையின்றியே பெற்றாராயின்,
 |