| 
         
        
      
        சூத்திரம்-57 
        
      
        அவற்றுள்
 எச்சமும் கோளும் இன்மையும் உரிய.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், மேற்கூறப்பட்ட பத்தினுள்ளும் எச்சமும்
 கோளும் இன்றியும் உரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று.
 
 இதன் பொருள்: 
        அவற்றுள் என்பது - மேற் கூறப்பட்ட
 பத்தினுள்ளும் என்றவாறு; எச்சமும் கோளும் இன்மையும் உரிய என்பது -
 எச்சமானும் கோளானும் அவ்விரண்டினுள்ளும் ஒன்றொழிந்தும் இரண்டும்
 ஒழிந்தும் நிற்கவும் பெறும் என்றவாறு.
 
 அவற்றுள், எச்சமின்றி வந்ததற்குச் செய்யுள்:
 
 ‘ஆமான் அனையமென் னோக்கி அழுங்க லகன்றுசென்ற
 தேமா நறுங்கண்ணி யாரையுங் காட்டுந்தென் பாழிவென்ற
 வாமா நெடுந்தேர் மணிவண்ணன் மாறன்வண் தீந்தமிழ்நர்
 கோமான் கொடிமே லிடியுரு மார்க்கின்ற கூர்ம்புயலே.’ 
        (322)
 
 இனிக், கோளின்றி வந்தது வருமாறு:
 
 ‘வாடு நிலைமையை நீக்கிமண் காத்துவல் 
        லத்தெதிர்ந்தார்
 ஓடு நிலைமைகண் டான்வையை யொண்ணுதன் 
        மங்கையரோ
 டாடு நிலைமையை அல்லை அவரொடம் பூம்பொழில்வாய்
 நீடு நிலையையும் அல்லைசொல் லாயென் நெடுந்தகையே’ (323)
 
 எனக் கொள்க. 
        (24)
 
        
      
        சூத்திரம்-58
 
        
      
        சொல்லே குறிப்பே ஆயிரண் டெச்சம்.
 
 என்பது என்னுதலிற்றோ எனின், மேற்கூறப்பட்ட எச்சம் இரண்டு வகைப்படும்
 என்பது உணர்த்துதல் நுதலிற்று.
 
 இதன் பொருள்: 
        சொல்லே குறிப்பே ஆயிரண்டு எச்சம் என்பது -
 சால்லெச்சமும் குறிப்பெச்சமும் என இரண்டு எச்சம் ஆம் என்றவாறு.
 
 சொல்லெச்சம் என்று சொல்லப்பட்ட வாய்பாடின்றிப் பிறவாய்பாட்டால்
 தோன்றினும் என்றவாறு.
 
 எச்சம் என்பது ஒழிதல் என்றவாறு.
 |