|
செய்தி - வரகுக்குக் களைகட்டலும், அவை அறுத்தலும்,
கடாவிடுதலும், நிரைமேய்த்தலும்;
பண் - முல்லை.
‘பிறவும்’ என்றதனால்,
தலைமகன் பெயர்
- குறும்பொறை நாடன்;
தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி; (இப் பெயர்
மருத நிலத்துத்
தலைமகட்கும் உரிய;)
பூ
- முல்லையும், தோன்றியும்;
நீர் - கான்யாறு;
ஊர் - பாடியும், சேரியும்;
மக்கள் பெயர்
- இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர்
எனப்படும்.
மருதத்துக்குத்,
தெய்வம் - இந்திரன்;
உணா
- செந்நெல்லும், வெண்ணெல்லும்;
மா
- எருமையும், நீர்நாயும்;
மரம் - வஞ்சியும், காஞ்சியும், மருதும்;
புள் - நீர்க்கோழியும், தாராவும்;
பறை
- மணமுழவும், நெல்லரி கிணையும்;
செய்தி
- நெல்லரிதலும், அவை கடாவிடுதலும், பயிர்க்குக்
களைகட்டலும்;
யாழ் - மருதயாழ்;
‘பிறவும்’ என்றதனால்,
தலைமகன் பெயர் - ஊரன், மகிழ்நன்;
தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி;
பூ
- தாமரைப்பூவும், செங்கழுநீர்ப்பூவும்;
நீர்
- மனைக்கிணறும், பொய்கையும்;
மக்கள் பெயர் - கடையர், கடைசியர், உழவர்,
உழத்தியர்;
|