|
‘விண்டார் படவிழி ஞக்கடற் கோடியுள் வேல்வலங்கைக்
கொண்டான் குடைமன்னன் கூடற் குடவரைக் கொம்பொடொக்கும்
வண்டார் குழன்மட மங்கை மதர்வைமென் னோக்கமென்போற்
கண்டா ருளரே லுரையார் பிறவின்ன கட்டுரையே’
(30)
‘மண்கொண்டு வாழ வலித்துவந் தார்தம் மதனழிந்து
புண்கொண்ட நீர்மூழ்கப் பூலந்தை வென்றான் புகாரனைய
பண்கொண்ட சொல்லம் மடந்தை முகத்துப்பைம் பூங்குவளைக்
கண்கண்ட பின்னை யுரையீ ருரைத்தவிக் கட்டுரையே’
(31)
‘அம்ம வாழி
கேளிர் முன்னின்று
கண்டனி ராயிற் கழறலிர் மன்னோ
நுண்தாது பொதிந்த செங்காற் கொழுமுகை
முண்டகங் கெழீஇய மோட்டுமண லடைகரைப்
பேஎய்த் தலைஇய பிணரரைத் தாழை
எயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன்
வயிறுடைப் போது வாலிதின் விரைஇப்
புலவுப் பொருதழித்த பூநாறு பரப்பின்
இவர்திரை தந்த வீர்ங்கதிர் முத்தங்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கு
நற்றேர் வழுதி கொற்கை முன்துறை
வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற்
போது புறங்கொடுத்த உண்கண்
மாதர் வாண்முக மதைஇய நோக்கே’
(அகம் - 130)
‘இடிக்குங்
கேளிர் நுங்குறை யாக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெ யுணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற்1 கரிதே.’
(குறுந் - 58)
கவன்றுரைத்தல்
இவ்வாறு தலைமகன் தனது ஆற்றாமையின் கழற்றெதிர்
மறுத்து
உரைப்பக் கேட்ட பாங்கன், ‘தானே தகாதனவற்றைத் தகர் என்று
உணரற்பாலான், யான், எம்பெருமாற்குத் தக்கதோ இவ்வாறு உள்மெலிவது?
எனவும் தெருண்டிலன்; தெருளாவிட்டது தான் காணப்பட்ட உருவம்
அந்நீர்மைத்தே யாம்; அன்றாயின், தெருளுமன்றே’ எனக் கவன்றான்.
அக்கவற்றிற்குச் செய்யுள்:
(பாடம்) 1. நொண்டுகொளற்.
|