பக்கம் எண் :
 
54இறையனார் அகப்பொருள்

                  குறிவழிக் காண்டல்

 தண்டா தலர்கண்ணி யண்ணல்தன் னுள்ளந் தளர்வுசெய்த
  வண்டார் குழலவ ளேயிவள் மானீர் மணற்றிமங்கை
  விண்டார் உடற்குன்ற மேறி விழிகட் கழுதுறங்கக்
  கண்டான் பொதியில் இதுவே அவன்சொன்ன கார்ப்புனமே.
’   (38)

  ‘சினமு மழிந்து செருவிடைத் தோற்றதெவ் வேந்தர்கள்போய்க்
  கனவும் படிகடை யற்செற்ற வேந்தன் கருங்குழலார்
  மனமும் வடிக்கண்ணுந் தங்குமந் தாரத்து மன்னன்கன்னிப்
  புனமும் இதுவிது வேயவன் தான்கண்ட பூங்கொடியே
’.        (39)

 

               தலைவனை வியந்துரைத்தல்

       என நினைந்து நின்று, ‘இவ்வுருவினைக் கண்ட எம்பெருமான்
ஆற்றுதற்குக் காரணம் என்ன? பெரியார்க்கே ஆகாதே! அரியனதாம் கற்று
வல்லன் அவன் ஆகலான் ஆற்றினான்; பிறராயின் இறந்துபடுப.
இறந்துபடாது என்காறும் வந்த இருந்துணைப் பெருந்தக்கானை யான்
பெரியதோர் இடனன்றிக் கழறினேன்’ என நினைக்கும். அதற்குச் செய்யுள்:

  ‘இருநெடுந் தோளண்ண லேபெரி யான்வல்லத் தேற்றதெவ்வர்
  வருநெடுந் தானையை வாட்டிய கோன்கொல்லி மால்வரைவாய்த்
  திருநெடும் பாவை அனையவள் செந்தா மரைமுகத்த
  கருநெடுங் கண்கண்டு மாற்றிவந் தாமென்னைக் கண்ணுற்றதே
’ (40)

  ‘
பெரிய நிலைமை யவரே பெரியர் பிறையெயிற்றுக்
  கரிய களிறுந்தி வந்தார் அவியக் கடையல்வென்ற
  வரிய சிலைமன்னன் மான்தேர் வரோதயன் வஞ்சியன்னாள்
  அரிய மலர்நெடுங் கண்கண்டு மாலண்ண லாற்றியதே
.’

மற்று இவ்வகையும் சிந்திக்கும்:


  ‘துறைமேய் வலம்புரி தோய்ந்து மணலுழுத தோற்றமாய்வான்
  பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது போர்க்குங்கானல்
  நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
  உறைமலியுய்யா நோயூர்சுணங்கு மென்முலையே தீர்க்கும்போலும்

                                   (சிலப்பதிகாரம், கானல்வரி - 8)

  எனவும்,

   ‘மணங்கமழ் குழலிவள் வடிக்கண் செய்த மம்மர்வெந்நோய்
   சுணங்கணி வனமுலை யல்லது தீர்க்கல்லா

எனவும், இவ்வகை நினைந்து ஆற்றானாயும், இறந்துபடானாயினான்,
அவனை அஃது எய்துவிக்குந் திறம் என்னை கொல்லோ என்பதனான்.
ஆற்றியுளனாய்த் தலைமகனைச் சென்றெய்தி, ‘யான் கண்ட இடம்
மேதக்கதே காண்’ என்னும்; அதற்குச் செய்யுள்: