கண்டு, ‘தெய்வத்தினான் ஆயிற்றுக்கொல்லோ! மற்றொருவாற்றா
னாயிற்றுக்கொல்லோ!‘ என ஐயுற்று நிற்பது; அதற்குச் செய்யுள்:
தோற்றத்தான் ஆராய்தல்
‘கந்தார் அடுகளி யானைக் கழல்நெடு
மாறன்கன்னிக்
கொந்தா டிரும்பொழில் வாய்ப்பண்ணை ஆயத்துக் கோலமென்பூம்
பந்தா டலினிடை நொந்துகொல் பைங்கழல் வெண்மணல்மேல்
வந்தா டலினடி நொந்துகொல் வாள்நுதல் வாடியதே.’
(73)
‘பொருந்திய பூந்தண் புனல்தான் குடைந்துகொல்
பொற்கயிற்றுத்
திருந்திய ஊசல்சென் றாடிக்கொல் சேவூர்ச் செருவடர்த்த
பருந்திவர் செஞ்சுடர் வெல்வேற் பராங்குசன் பற்றலர்போல்
வருந்திய காரணம் என்னைகொல் லோமற்றிவ் வாள்நுதலே.’
(74)
குறையுறவுணர்தல்
இனிக், குறையுறவுணர்தல் என்பது-அவன் தழையும் கண்ணியும்
கொண்டு பின்னிலைமுனியாது நிற்ப, ஒக்கும், இவன் இரந்துபின்னிற்கின்றது
இவள் காரணமாகப்போலும் என உணர்வது. அது பொருந்தாது; என்னை,
யாரானும் ஒருவர் தன்னுழை ஒரு குறையுடையராய்ச் சென்றவிடத்து இவள்
கண்ணதென்று கருதுவளாயின் அவளை அவமதித்துக் கருதினாளாம்,
அவளது பெருமையோடு மாறுகொள்ளும் என்பது, மற்றென்னோ
குறையுறவுணருமாறு எனின், அவன் இரந்து பின்நிற்கின்றது,
எற்றிற்குக்கொல்லோ என உணர்வதாயிற்று; அதற்குச் செய்யுள்:
இவர்மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்
‘மழையும் புரைவண்கை வானவன் மாறன்மை
தோய்பொதியில்
வழையுங் கமழு மணிநெடுங் கோட்டுவண் சந்தனத்தின்
தழையும் விழைதகு கண்ணியும் ஏந்தித்தண் பூம்புனத்தின்
உழையும் பிரியகில் லானறி யேனிவன் உள்ளியதே.’
(75)
‘திண்பூ முகநெடு வேல்மன்னர் சேவூர்ப்
படமுடிமேல்
தண்பூ மலர்த்தும்பை சூடிய தார்மன்னன் நேரியென்னும்
வண்பூஞ் சிலம்பன் வரைப்புன நீங்கான் வருஞ்சுரும்பார்
ஒண்பூந் தழையுந் தருமறி யேனிவன் உள்ளியதே.’
(76)
இவை இரண்டும் ஐயவுணர்வே, துணிவுணர்வல்ல.
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல்
இருவரும் உள்வழி அவன்வரவு உணர்தல் என்பது -
அவ்வைய
வுணர்வோடு நின்றாள், இருவரும் உள்வழி அவன் வந்து
|