‘விரைவளர் வேங்கையும் காந்தளும்
கொய்தும் வியலறைமேல்
நிரைவளர் மாமயில் ஆடுவ காண்டும் நிகர்மலைந்தார்
திரைவளர் பூம்புனற் சேவூர் படச்செற்ற தென்னன்கொல்லி
வரைவளர் மாநீர் அருவியும் ஆடுதும் வாள்நுதலே’
(99)
எனச் சொன்னிகழ்ந்தவாறு.
வலிதாகச் சொல்லிக் குறைநயப்புக் கூறினவழி,
‘நெருநல்
வாரானாயினான், ஆதலின் இறந்துபட்டான்’ என ஆற்றாமை நிகழ்ந்து
பெருமையாற் சொற்பிறவாது எனக் கொள்க.
இனி, ஒரு சாரார் சொல்லுவது: இயற்கைப்புணர்ச்சி
புணர்ந்ததற்கு
இடையின்றியே இற்செறிக்கப்பட்ட தலைமகள் தோழிக்கு அறத்தொடு
நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று என்ப.
அவர் கூறும் பொருளாமாறு: தன்னுட் குறிப்பினை அருகுந்
தோழிக்கு என்பது - தன்கண் வேறுபாட்டை அறிதலுறுந் தோழிக்கு
என்றவாறு; முன்னுறு புணர்ச்சியின் அருகலும் உண்டு என்பது-முன்னுறு
புணர்ச்சி காரணமாகச் சார்தலும் உண்டு என்றவாறு. என்னை,
‘முற்படு
புணர்ச்சியிற் கடிபடு கிழத்தி
மெய்ப்பாட் டவலம் புரியுந்
தோழிக்கு
ஏதீ டாக எண்ணிய முறையாற்
கூறவும் பெறூஉம் குறிப்பொடு புணர்ந்தே
கற்புக்கடை காக்கும் கருத்தி
னான’
என்பதன் பொருளால், தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்றது என்பது.
அஃது ஈங்குச் சொல்ல வேண்டுவதில்லை.
போக்கி,
‘அந்நா
லிடத்தும் மெய்ந்நாண் ஒரீஇ
அறத்தொடு நிற்றல் தோழிக்கும்
உரித்தே’ (இறையனார்-29)
என்பதன்கட் சொல்லுதும்.
ஒருவர்க்கு ஒரு சொற் சொல்லியவிடத்து அச் சொல்
சொல்லப்பட்டார் இன்ன நீர்மையராயினார் என்பது சொல்ல வேண்டுமன்றே,
மேற் சூத்திரத்துள், தோழி தலைமகளைக் குறையுறும்’ என்றார், இச்
சூத்திரத்துள், ‘குறையுறப்பட்ட தலைமகள் இன்ன நிலைமையளாயினாள்’
என்பது சொல்லவேண்டும். அதனான், மேலதே உரை.
|