பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 85
 

      மதியுடம்படுத்துப் பின்னின்றானாகத் தான் இதனை முடிக்கக்
கருதுவாள் தன்கண் நாணுக் கெடுந்துணையுங் குறியாடிக்கொண்டு ஒழுகுமாறு
உணர்த்துதல் நுதலிற்று எனவும் அமையும்.

     
இதன் பொருள்: குறையுறுங் கிழவனை உணர்ந்த தோழி என்பது-
றையுற வந்த தலைமகனைக் கடைப்பிடித்த தோழி என்றவாறு;
கடைப்பிடியாது சென்ற காலமும் உளவாகலின், இனி அன்னதன்று
என்றவாறு; அல்லதூஉம், குறையுறுங் கிழவனை உணர்ந்த தோழி என்பது-
றையுறவினான் ஆற்றானாகிய தலைமகனை உணர்ந்த தோழி என்றுமாம்;
அல்லதூஉம், இரத்தலுங் குறையுறுதலுஞ் செய்து ஆற்றானாகிச் செல்லாநின்ற
தலைமகனைத் தன்னினாகிய கூட்டம் முடியாதுவிடின் ஆற்றான்
என்பதனைத் திரிபின்றி உணர்ந்த தோழி என்றுமாம்.

    
 சிறை உறக் கிளந்து சேட்பட நிறுத்தலும் என்பது - சிறை
என்பது காப்பு, உற என்பது மிகுதி, கிளத்தல் என்பது சொல்லுதல், சேண்
என்பது அகற்றல், பட என்பது நிகழ்தல், நிறுத்தல் என்பது தழீஇக்கோடல்
என்றவாறு; காப்பு மிகுதி சொல்லி அகற்றித் தழீஇக் கோடலுறும் என்றவாறு;
ஆற்றாத் தன்மைக்கண் நிறுத்தல் என்னுஞ் சொல்1 தழீஇக்கொள்ளும்
என்பது; எனவே, தலைமகனை ஆற்றாமை செய்வனபோன்று வைத்து
ஆற்றுவிப்பன சிலசொற் சொல்லும் என்பது போந்தது. இந் நிறுத்தல்
என்னுஞ் சொல்லால் தழீஇக்கொள்ளும் என்பதன்று, நீக்கிநிறுத்தார்,
உய்ந்துவிட்டார், போக்கிவிட்டார் என்பனபோல ஒருசொல் விழுக்காடுபட
நின்றது
என்பாரும் உளர்.

      அங்ஙனங் காப்பு மிகுதி சொல்லுமாறு: ‘இவ்விடம் மிக்க
காவலுடைத்து. நீயிர் வரற்பாலிரல்லீர்’ எனச் சொல்லும்; அதற்குச் செய்யுள்:

                 
காப்புடைத்தென்று மறுத்தல்

   ‘மண்ணிவர் செங்கோல் வரோதயன் வல்லத்து மாற்றலர்க்கு
   விண்ணிவர் செல்வம் விளைவித்த வேந்தன்விண் தோய்பொதியில்
   கண்ணிவர் பூந்தண் சிலம்பிடை வாரல்மின் காப்புடைத்தாற்
   பண்ணிவர் வண்டறை சோலை வளாயஎம் பைம்புனமே
.’  (102)

   ‘புல்லா வயவர் நறையாற் றழியப் பொருதழித்த
   வில்லான் விளங்குமுத் தக்குடை மன்னன் வியனிலத்தார்
   எல்லாம் இறைஞ்சநின் றான்கொல்லி மல்லலஞ் சாரலிங்கு
   நில்லா தியங்குமின் காப்புடைத் தையஇந் நீள்புனமே.’   (103)

  
 1. ஆற்றிக்கொள்ளும்.