முன்னுறு புணர்ச்சி முறை முறை செப்பலும் என்பது-
முன்னுறு
புணர்ச்சி என்பது இயற்கைப் புணர்ச்சி, அதன் முறை என்பது
பாங்கற்கூட்டம், அதன் முறை என்பது தோழிதன்னினானாய கூட்டம், அஃது
என்னை மறையாது விடின் முடிப்பன் என்றாளாம்; அதனான், ‘என் குறை
அறிந்திலள், அறிந்த ஞான்று முடித்துத் தரும்’ என ஆற்றுவானாம்
என்றவாறு.
மாயப் புணர்ச்சி அவனொடு நகாஅ நீயே சென்று கூறென
விடுத்தலும் என்பது
- அவன் இரந்து பின்னின்றவிடத்து மாயமான
புணர்த்துச் சொல்லுகின்றது, இஃது உலகத்து நிகழ்வதொன்றன்றாலோ என்று
அவனொடு நகாநின்றே, ‘யாரறிவார், நிகழவும்பெறும் நிகழாமையும்பெறுமே
எனினும், யாம் குற்றேவன் மகளிராகலான் துணிந்துசொல்லகில்லேம் அவளது
குறிப்பறியாது; நீயே சென்று நின்குறை சொல்லாய்’ என்னும்; அதற்குச்
செய்யுள்:
நின்குறை நீயே கூறென்று மறுத்தல்
‘சேயே எனநின்ற தென்னவன் செந்நிலத் தேற்றதெவ்வர்
போயே விசும்பு புகச்செற்ற கோன்அந் தண்பூம்பொதியில்
வேயே அனையமென் தோளிக்கு நின்கண் மெலிவுறுநோய்
நீயே உரையாய் விரையார் அலங்கல் நெடுந்தகையே.’ (107)
‘புரைத்தார் அமர்செய்து பூலந்தைப் பட்டபுல் லாதமன்னர்
குரைத்தார் குருதிப் புனல்கண்ட கோன்கொல்லிப் பாவையன்ன
நிரைத்தார் கருமென் குழலிக்கு நீயே நெடுந்துறைவா
உரைத்தால் மிகுவதுண் டோசென்று நின்றுநின் உள்மெலிவே’(108)
என்னும்; என்றவிடத்து ஆற்றானாம்; என்னை, உலகத்தார் ஒருவரை ஒருவர்,
‘இக்குறை முடித்துத்தரல்வேண்டும்’ என்று இரந்தவிடத்து, ‘என்னின் ஆகா,
நீரே சென்று முடித்துக் கொண்மின்’ என்றால், எத்துணையும் இன்னாதன்றே,
அதுபோல என்பது. அவ்வகை ஆற்றானாய் நின்றானது ஆற்றாமை
ஆற்றுவது ஒன்றனைப் பற்றும், என்னை, ‘நகாநின்றன்றே சொல்லியது,
அந்நகை ஒன்றுடைத்து’ என ஆற்றுவானாவது.
இனி, அறியாள் போறலும் என்பது
- தலைமகன் தழையும்
கண்ணியும் கொண்டு பின்னின்றவிடத்து, ‘நும்மாற் சொல்லப்படுவாளை
அறியேன்’ என்னும்; அதற்குச் செய்யுள்:
|