13 | இரண்டாவதெழுத்தின்வகுப்பு | வேண்டு மொளி மாழ்குஞ் செய்வினை, யாஅது மென்னு மவர்." "உறா அர்க்குறுநோ யுரைப்பாய் கடலைச், செறா அஅய்வாழியநெஞ்சு." "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாணுசுப்பிற்கு, நல்லபடாஅபறை" என முறையேமொழிமுத லிடைகடை மூவிடத்தள பெடுத்தன. அன்றியும் ஒளகாரம் மொழிக்கிடையினுங் கடையினும் வராமையானும் அவ்விடங்களில் அது நீங்கலாகி அளபெடுக்கும். அளபெடை பத்தொன்பதுடனே "கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே, யெடுப்பதூஉ மெல்லாமழை." என இன்னிசை நிறைக்கவருமள பெடையும், "உரனசை இயுள்ளந் துணை யாகச்சென்றார், வரனசை இயின்னுமுளேன்." எனச்சொல்லிசை நிறை க்கவரு மளபெடையுங்கூடி இருபத்தொன்றாதல் காண்க. முதலெழுத்தினொலி வடிவினும் வரிவடிவிற் குறியினும் வேறாய் நெட்டுயிர் தன்மாத்திரையி னீண்டளபெடுத்தலின் காரணத்தா னுயிரளபெடையெனப் பெயராய்ச் சார்பெழுத்தி னொன்றாயின. - சூத்திரம். "தனிநிலை முதனிலை யிடைநிலையீறென, நால்வகைப் படூஉ மளபாய்வருமிடனே" எ-ம். "குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கு, நெட்டெழுத்திம்ப ரொத்தகுற்றெழுத்தே, ஐ ஒள வென்னுமாமீரெழுத்திற், கிகர வுகர மிசை நிறைவாகும்." எ-ம். கூறினார்.-நன்னூல். "இசைகெடின்மொழிமுத லிடைகடை நிலை நெடி லளபெழுமவற்றவற் றினக்குறில்குறியே." இவை மேற்கோள். இசைகெடினும் இசைகெடாவிடினும் வழக்கச் சொல்லிடத்து முயிரள பெடை வழங்கு மென்றுணர்க. அன்றியும் ஒற்றளபெடையாவது மெல்லினமாறும் ரழ வொழித்தொழிந்த இடையின நான்கும் ஆய்தமும் இரு குற்றெழுத்தின் கீழும் ஒரு குற்றெழுத்தின் கீழும் மொழியி னிடையினும் கடையினு நின்றளபெடுக்கும். எடுத்த வளபிற்குக் குறியாக இரட்டித்து வரும். (உ-ம்.) அரங்ங்கம், முரஞ்ஞ்சு, முரண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, முரன்ன்று, குரவ்வ்வை, அரைய்ய்யர், குரல்ல்கள், திரள்ள்கள், வரஃஃகு என இரு குற்றெழுத்தின் கீழிடையினும்; மங்ங்கலம், மஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், வெய்ய்யர், செல்ல்க கொள்ள்க, எஃஃகு, என ஒரு குற்றெழுத்தின் கீழிடையினும்; மடங்ங், உரிஞ்ஞ், அரண்ண், பொருந்ந், கனம்ம், பரன்ன், பகல்ல், திரள்ள் எனஇரு குற்றெழுத்தின் கீழ்க்கடையினும்; நங்ங், நஞ்ஞ், கண்ண், நந்ந், அம்ம், பொன்ன், தெவ்வ், செய்ய், கல்ல், வள்ள் என ஒரு குற்றெழுத்தின் கீழ்க் கடையினும் ஒற்றளபெடுத்துவந்தன. இவை செய்யுட்கண் வருவன. அவை வருமாறு. (உ-ம்) "இலங்ங்குவெண்பிறைசூ டீசனடியார்க்குக், கலங்ங்குநெ ஞ்சமிலைகாண்." எங்ங்கிறைவ னுளனென்பாய்மனனேயா னெங்ங் கென த்திரிவாரின்." "மடங்ங்கலந்தமனனேகளத்து,விடங்ங்கலந்தானைவேண்டு." "அங்ங்கனிந்தவருளிடத்தார்க்கன்புசெய்து, நங்ங்களங்கறுப்பாநாம்." என முறையே குறிலிணைக்கீழ் குறிற்கீழ் இடையினுங் கடையினும் நான்கிடத் தளபெடுத்தன. அன்றியும் ஆய்தம் குறிலிணைக்கீழ்க் குறிற்கீழ்க் கடையில் |
|
|