னேரும் வரப்பெறி னியற்சீர் வெண்டளையாம். காயீற்ற வெண்சீர் வந்து நின்றசீ ரீற்றசையும் வருஞ்சீர் முதலசையுமொன்றி நேர்முன்னேரும் வரப் பெறின் றன்றளையாகிய வெண்சீர்வெண்டளையாம். ஆகையின் வெண்டளையு மிருவகைத்தே. இவ்விரு வகைக்குப் பொதுவிதியாக மாமுன்னிரையும் விளமுன்னேருங் காய்முன்னேரும் வருவது வெண்டளை யெனவே கொள்க. - "வெண்சீரொன்றலு மியற்சீர்விகற்பமு, மென்றிரண்டென்ப வெண்டளைக் கியல்பே." என்பதியாப்பருங்கலம். (வ-று.) "வெய்யகுர றோன்றி வெஞ்சின வேறுட் கொளினும், பெய்யுமழை முகிலைப் பேணுவரால் - வையத், திருள்பொழியுங் குற்றம் பலவெனினும்யார்க்கும், பொருள்பொழிவார் மேற்றே புகழ்." என விருவகை வெண்டளை வந்தவாறு காண்க. அன்றியும், வெண்பா முதலியவற்றிற் கெழுத்தெண்ணி யசைபிரித்துச் சீர்சிக்கறுத்துத் தளைநோக்குங் காலையிற் சிற்சிலவிடத்துச் சீருந்தளையுஞ் சிதைந்து வருமாயின் குற்றியலிகரங் குற்றியலுகர முயிரளபெடை யிவை யலகு பெறாது ஐகாரக்குறுக்கமும் ஒற்றளபெடையு மொவ்வொரு மாத்திரையாக வலகிடவும் பெறுமெனக்கொள்க. என்னை. - காரிகை. - "சீருந் தளையுஞ் சிதையிற் சிறிய இ உ அளபோ, டாருமறிவ ரலகுபெறாமை யைகாரநைவே, லோரு ங்குறிலிய லொற்றளபாய்விடி னோரகாம், வரும் வடமுந் திகழு முகிண் முலை வாணுதலே." என்றரகலின். (வ-று.) குறள். - "அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல், பொருளல்ல தவ்வூன்றினல்." இதனுள் குற்றிய லிகர மலகின்றி வந்தது காண்க. - இருசீரடிவஞ்சிப்பா. - "குன்றுகோடுநீடு குருதிபாயவுஞ், சென்றுகோடு நீடுசெழுமலை பொருவன, வென்றுகோடு நீடு விறல்வேழ, மென்று மூடு நீடு பிடியுள போலு, மதனாலீண்டிடையிரவிவணெ றிவரின், வண்டுண் கோதை யுயிர்வாழாளே." இதனுள் குற்றியலுகர மலகின்றி வந்ததுகாண்க. - வெண்பா. - "பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள், சொல்லுக்குந் தோற்றின்னந் தோற்றினவா - னெல்லுக்கு, நூறோ ஒநூறென் பாணுடங்கிடைக்கு மென்முலைக்கு, மாறோஒமா லன்றளந்த மண்." - "இடைநுடங்க வீர்ங்கோதைப் பின்றாழவாட்கண், புடைபெயரப் பேழ்வாய்திறந்து - கடைகடைபோ, யுப்போஒவென வுரைத்து மீள்வா ளொளிமுறுவற், கொப்போஒ நீர்வேலியுலகு." இவற்று ளுயிரளபெடை யலகின்றி வந்ததுகாண்க. - "அன்னையை யானோவதவமா லணியிழாய், புன்னையை யானோவன் புலந்து. - கெண்டையை வென்ற கிளரொளியுண்கணாள் பண்டைய லல்லள்படி." இவற்று ளைகாரங் குற்றெழுத்தைப்போ லலகு பெற்று வந்தவாறு காண்க. - "கண்ண்கரு விளைகார் முல்லைகூரெயிறு, பொன்ன் பொறிசுணங்கு பேழ்வாயிலவம்பூ, மின்ன்னுழை மருங்குன் மேத குசாயலா, ளென்ன்பிற மகளாமாறு." இதனு ளொற்றளபோ ரலகு பெற் றவாறு காண்க. யாப்பருங் கலம். - "தளைசீர் வண்ணந் தாங்கெட வரினே, குறுகியவிகரமுங் குறியலுகரமு, மளபெடையாவியு மலகியல்பிலவே.- ஆய்தமு மொற்று மளபெழநிற்புழி, வேறலகெய்தும் விதியினவாகும்." என்றார் காக்கைப் பாடினியார். |
|
|