நிறுத்தானு மேய்க்குந் - துளவே, கலைக்குமரி போர்துளக்குங் காரவுணர் வீரந், தொலைக்குமரி யேறுகைப்பா டோள்." என வரும். புகழுவமையாவது:- உவமையைப் புகழ்ந்துவமிப்பது. (வ-று.) "இறையோன் சடைமுடி மே லெந்நாளுந் தாங்கும், பிறையோ திருநுதலும் பெற்ற - தறைபுனல்சூழ், பூவலையந் தாங்கு மரவின் படம்புரையும், பாவை நின்னல்குற் பரப்பு." என வரும். நிந்தையுவமை யாவது:- உவமையைப் பழித்துவ மிப்பது. (வ-று.) "மறுப்பயின்ற வாண்மதியும் மதிக்குத் தோற்கு, நிறத்தலரு நேரொப்பதேனுஞ் - சிறப்புடைத்துத், தில்லைப் பெருமா னருள்போற் றிருமேனி, முல்லைப் பூங்கோதை முகம்." என வரும். தெரிதருதேற்றவுவமை யாவது:- ஐயுற் றதனைத் தெரிந்து துணிவது. (வ-று.) "தாமரை நாண்மலருந் தண்மதியால் வீறழியுங், காமர் மதியுங் கறையிரவு - மாமிதனாற், பொன்னை மயக்கும் பொறிசுணங்கினார் முகமே, யென்னை மயக்கு மிது." எனவரும். இயம்புதல் வேட்கையுவமை யாவது:- பொருளை யின்னதுபோலு மென்று சொல்ல வேட்கின்ற தென்னுள்ள மென்பது. (வ-று.) "நன்று தீதென் றுணரா தென்னுடைய நன்னெஞ்சம், பொன்றுதைந்த பொற்சுணங்கிற் பூங்கொடியே - மன்றன், மடுத்துதைந்த தாமரைநின் வாண்முகத்துக் கொடுப்பென், றெடுத்தியம்பல் வேண்டுகின்ற தின்று." என வரும். பலபொரு ளுவமையாவது:- ஒரு பொருளுக்குப் பலபொருளைக் காட்டுவது. (வ-று.) "வேலுங் கருவிளையு மென்மானுங் காவியுஞ், சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும் - போலுமாற், றேமருவி யுண்டு சிறைவண் டிறைகூந்தற், காமருவு பூங்கோதை கண்." என வரும். விகாரவுவமை யாவது:- உவமையை விகாரம் பண்ணி யுவமிப்பது. (வ-று.) "சீத மதியி னொளியுஞ் செழுங்கமலப், போதின் புதுமலர்ச்சியுங் கொண்டு - வேதாத்தன், கைம்மலரா லன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான், மொய்ம்மலர்ப் பூங்கோதை முகம்." என வரும். மோகவுவமை யாவது:- ஒரு பொருண்மே லெழுந்த வேட்கையான் வந்த வுள்ள மயக்கந் தோன்ற வுரைப்பது. (வ-று.) "கயல்போலு மென்று நின்கண் பழிப்பக் கண்ணில், செயல்போற் பிறழுந் திறத்தாற் - கயல்புகழ்வ, லாரத்தா னேர்மருங்குலந் தரளவான் முறுவ, லீரத்தாலுள வெதும்பும் யான்." என வரும். அபூதவுவமையாவது:- முன் பில்லாத தனை யுவமை யாக்கி யுரைப்பது. (வ-று.) "எல்லாக்கமலத் தெழிலுந் திரண் டொன்றில், வில்லேர் புருவத்து வேனெடுங்கண் - ணல்லார், முகம்போலு மென்ன முறுவலித்தார் வாழு, மகம்போலு மென்ற னறிவு." என வரும். பலவயிற்போலி யுவமையாவது:- ஒரு தொடர் மொழிக்கட் பலவுவமை வந்தா லவ்வுவமைதோறு முவமைச் சொற்புணர்ப்பது. (வ-று.) "மலர்வாவி போல்வரான் மாதர் கமல, மலர்போலு மாதர் வதன - மலர்சூ, ழளிக்கு லங்கள்போலு மளக மதனுட், களிக்குங் கடல்போலுங் கண்." எனவரும். ஒரு வயிற்போலியாவது:- ஒரு தொடர்மொழிக்கட் பல வுவமை வந்தா லவ்வுவமை தோறு முவமைச் சொற் புணரா வொரு வுவமைச் சொற்புணர்ப்பது. |
|
|