காரியத்திற்குக் காரணமும், ஒன்றன்பண்பு மற்றொன்றற்கேற்புழி உரைப்பது மைவகையாகுபெயராம். (உ-ம்.) பூநிழற்சோலை எ-து. பூவெனுஞ் சினைப்பொருளாற் பூத்தமரங்களாகிய முதற்பொருளைக் காட்டுஞ் சினையாகுபெயர். புளியம்பழந் தின்றானைப் புளியைத்தின்றான் எ-து. சினையைக்காட்டுமுத லாகுபெயர். ஞாயிறெழுந்ததற் கொளியெழுந்தது எ-து. காரணத்தைக் காட்டுங்காரியவாகுபெயர். தாமரை கதிர்படமலரும், என்பதற்கு, ஞாயிறுபடமலரும், எ-து. காரியத்தைக்காட்டுங் காரணவாகுபெயர். பூத்தன வென்பதற்குக் குவளை நோக்கின, எ-து. முல்லை நகைத்தன, எ-து. ஒன்றன்பண்பு மற்றொன்றற் குரைத்த பண்பாகுபெயர். அங்ஙனஞ் சீனப்பட்டு, எ-து. சீனதேயத்துறுப்பாகிய மைந்தராற்செய்யப்பட்ட தென்று காட்டினவத னாற் சினையைக்காட்டுமுதலாகுபெயர். அரிசி நாழி, பஞ்சு துலாம், எ-து. நாழியாலளக்கப்பட்டதுந் துலாத்தானிறுக்கப்பட்டதுங் காட்டினவதனாற் காரியத்தைக் காட்டுங் காரணவாகு பெயர். அன்றியும், சிலநூலாசிரியர் ஆகுபெயர் பன்னிரண்டும் பிறவுமாமென்றுங் கூறுவர். (உ-ம்.) தாமரையினது பூவை தாமரை, எ-து. தாமரை யென்னு முதற் பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலால் பொருளாகு பெயர். அகத்திலிருக்கின்ற மனதை அகம், எ-து. அகமென்னு முள்ளிடப்பெயர் மனதிற்காதலால் இடவாகுபெயர். கார்காலத்தி லுண்டாகும் பயிரை கார், எ-து. காரென்னும் ஒரு பருவகாலத்தின்பெயர் அப்பருவகாலத்தில் விளையும் பயிருங்காதலால் காலவாகுபெயர். புளியையுடைய மரத்தினை புளி, எ-து. புளியென்னுஞ் சினைப்பெயர் அதன் முதற்பொருளாகிய மரத்திற்காதலால் சினையாகுபெயர். நீலஞ்சூடினாள், எ-து. நீலமென்னுங் குணப்பெயர் அந்நிறத்தையுடைய குவளை மலருங்காதலால் குணவாகு பெயர். வற்றலோடுண்டான், எ-து. வற்றலென்னுந் தொழிற்பெயர் அதனைப் பொருந்தியதோ ருணவிற்காதலால் தொழிலாகுபெயர். ஒன்றுவந்தது, எ-து. ஒன்றென்னும் எண்ணுப்பெயர் அதனால் எண்ணப்படு மொரு பொருளுங்காதலால் எண்ணலளவையாகுபெயர். துலாக்கோல், எ-து. துலாமென்னும் எடுத்தலளவைப் பெயர் அதன் கருவியாகிய தராசுக்காதலால் எடுத்தலளவையாகு பெயர். நாழியுடைந்தது, எ-து. நாழியென்னு முகத்தலளவைப்பெயர் அதன் கருவிக்காதலால் முகத்தலளவையாகு பெயர். வேலூர்தடி விளைந்தது, எ-து. தடியென்னும் நீட்டலளவைப்பெயர் அதனாலளக்கப்பட்ட வயலுக்காதலால் நீட்டலளவையாகு பெயர். நன்னூலிற் குரைசெய்தான், எ-து. உரை யென்னுஞ் சொல்லின் பெயர் அதன் பொருளுக்காதலால் சொல்லாகுபெயர். விளக்கு முரிந்தது, எ-து. விளக்கென்னுந் தானியின்பெயர் அதற்குத் தானமாகிய தண்டிற்காதலால் தானியாகுபெயர். திருவாசகம், எ-து. வாசக மென்னுங் காரணத்தின் பெயர் அதன்காரியமாகிய ஒரு நூலுக்காதலால் காரணவாகுபெயர். இந்நூல் அலங்காரம், எ-து. அலங்காரமென்னும் இலக்கணமாகிய காரியத்தின்பெயர் அதன் கருவியாகிய |
|
|