(இ-ள்.) முக்காலத்து வினையெச்ச விகுதிகளா மாறுணர்த்துதும்.இ, உ, என, ஊ, பு, ஆ, விகுதி யிறந்தகாலங் காட்டுந் தெரிநிலை வினையெச்சங்களாம். (உ-ம்.) ஆறி, ஆடி, எ-ம். செய்து, வந்து, எ-ம். உண்டென, பட்டன, எ-ம். செய்யூ, காணூ, எ-ம். செய்பு, காண்குபு, எ-ம். உண்ணா, காணா, எ-ம். வரும். ஆய், போய், என, ய, விகுதி வருதலுமறிக. இவ்வெச்சம்பகுதி விகுதி விகாரப்பட்டும் வரும். (உ-ம்.) புக்குவந்தான், விட்டுவந்தான், என்பதில், புகு, விடு, பகுதிவிகாரம். தழீஇக்கொண்டான், உடீஇ வந்தான், என்பதில் தழுவி, உடுத்து, விகுதிவிகாரம். அ, விகுதி நிகழ்காலங்காட்டுந் தெரிநிலை வினையெச்சமாம். (உ-ம்.) உண்ண - காண, என வரும். ஒருவன் மோப்பக்குழையு மனிச்சம், எ-து. இருகருத்தாவைப் பற்றி முடிதலினிகழ்கால வினையெச்சமாயிற்று. யானே மலரைமோப்ப வெடுத்தேன், எ-து. ஒகருத்தாவைப்பற்றி முடிதலி னெதிர்கால வினையெச்சமாயிற்று. பொன்சுடரச்சுடுந்தீ, எ-து. எதிர்கால வினையெச்சமாயிற்று. தீச்சுடச் சுடரும் பொன், எ-து. நிகழ்கால வினையெச்சமாயிற்று. செயவென்னச்சம் இருகாலத்தில் வந்தது. - விருத்தம். - "விண்டுபெய்ய விரிந்தன முல்லைமேல், வண்டுபாட வந்தாடின மஞ்ஞையைக், கண்டுவாழ மணிக்கழலார்குழுக், கொண்டுபோகவெங்கொய்யுளையேறினார்." இதனுண் முதலீரடிக்கணிருகருத்தா வந்தமையா னிகழ்கால வினையெச்சமாயிற்று. அன்றியும் இல், இன், இய, இயர், வான், பான், பாக்கு, விகுதி யெதிர்காலங் காட்டுந் தெரிநிலை வினையெச்சங்களாம். (உ-ம்.) செய்யில் - செயில், எ-ம். படின் - வரின், எ-ம், நடத்திய - உண்ணிய, எ-ம். காணியர் - வாழியர், எ-ம். செய்வான் - உறங்குவான், எ-ம். உண்பான் - உரைப்பான், எ-ம். உண்பாக்கு - உரைப்பாக்கு, எ-ம். வரும். நடந்தால் - நடப்பித்தால், எ-ம். நடந்தக்கால் - ஒலித்தக்கால், எ-ம். நடத்தற்கு - நடப்பித்தற்கு, எ-ம். ஆல், கால், கு, விகுதி வருதலுமறிக. - குறள். - "பிறர்க்கின்னா முற்பகற்செய்யிற் றமக்கின்னா, பிற்பகற்றாமே வரும்." பிறவென்றமி கையால் தொழிற்பெயர்கட்கு உம்மை கூட்டி னிகழ்கால வினையெச்சத் திற்குமாம். (உ-ம்.) கேட்டலும், வளர்தலும், வருதலு, முதலியவை கேட்க, வளர, வர, எனப்பொருள் கொள்ளலுமாம். உணற்குவந்தான், எ-து. செயவென், வாய்பாடுபற்றிக் குவ் விகுதி வரும். உண்ணுமேற் பசி தீரும், எ-து. செயினென்னும் வாய்பாடுபற்றி ஏல், விகுதிவரும். எள்ளுமேனும் வரும், காண்டலுமிதுவே கூறும், இவற்றுள் ஏனும், உம்மும், ஒரோவிடத்தில் விகுதியாம். இறந்தகால வினையெச்சத்திற்கேவற் பகுதிமேல்விகுதி யாகவளபெடுத்த வீகாரங்கூட்டுவாரு முளர். (உ-ம்.) கொளீஇ, செலீஇ, இழீஇ, விழீஇ, எ-ம். வரும். - குறள். - "சலத்தாற்பொருள் செய்தேமாத்தல் பசுமட், கலத்துணீர் பெய்திரீஇயற்று." இதன்மே லகரமேற்ற இறந்த காலப்பெயரெச்சமாம். (உ-ம்.) இரீஇய, இருந்தழீஇய, எ-ம். இரீஇயன, தழீஇயன, எ-ம். வரும். - தேம்பாவணி. - "தழீஇயின கலன் பொறத்தளர்நுசுப்பெனக், |
|
|