செழுமை வளனுங் கொழுப்புமாகும். - தாவேவலியும் வருத்தமுமாகும்." இவைமேற்கோள். பண்புரிச்சொற்கள் வருமாறு: கடி, எ-து. காவல், கூர்மை - விரை - விளக்கம் - அச்சம் - சிறப்பு - விரைவு - மிகுதி - புதுமை - ஆர்த்தல் - வரைவு - மன்றல் - கரிப்பு, என்னும் பதின்மூன்று குணங்களை யுணர்த்துவதாம். (உ-ம்.) கடிநகர் - காவல், கடிநுனைப்பகழி - கூர்மை, கடிமாலை - வாசனை, கண்ணாடியன்ன கடிமார்பன் - விளக்கம், கடியரமகளீர்க்கே கைவிளக்காகி - அச்சம், அம்புதுஞ்சுங்கடியரண் - சிறப்பு, எங்கணைகடிவிடுதும் - விரைவு, கடியண்கடவுட் கிட்டசெழுங்குரல் - மிகுதி, கடிமுரசு - ஆர்த்தல், கடித்துக்கரும்பினை கண்டகரநூறி - வரைவு, கடிவினைமுடிகி - மன்றல், கடிமிளகுதின்ற கல்லாமந்தி - கரிப்பு, எனவரும். குரு, கேழ், இரண்டுநிறத்தையும்; நொசிவு, நுழைவு, நுணங்கு, மூன்று நுண்மையும்; மழவு, குழவு, இரண்டு மிளைமையும்; தடவு, கயவு, நளி, மூன்றும் பெருமையும்; வார்தல், போகல், ஒழுகல், மூன்றுநோவு நெடுமையும்; உணர்த்துவனவாம். தடவு, எ-து கோணலும் - பெருமையும், பொற்பு, எ-து. பொலிவும்; சாயல், எ-து மேன்மையும்; உணர்த்துவனவாம். - தொல்காப்பியம். - "கடியென்கிளவி, வரவே கூர்மைகாப்பேபுதுமை, விரைவே விளக்கமிகுதிச் சிறப்பே, யச்சமுன்றேற்றாயீரைந்து, மெய்ப்படத்தோன்றும் பொருட்டாகும்மே. - குருவுங்கெழுவு நிறனாகும்மே. - நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை. - மழவுங்குழவு மிளைமைப்பொருள. - தடவுங்கயவுநளியும் பெருமை. - வார்தல்போக லொழுகன்மூன்று, நேர்புநெடுமையுஞ் செய்யும் பொருள. - அவற்றுள், தடவென்கிளவி கோட்டமுஞ்செய்யும், களவென் கிளவிமேன்மையுஞ் செய்யும், நளியென்கிளவி செறிவுமாகும். - பொற்பே பொலிவு - சாயன் மேன்மை." இவை மேற்கோள். இசையுரிச்சொற்கள் வருமாறு:- முழக்கு - இரண்டு - ஒலி - கலி - இசை - துவை - பிளிறு - இரை - இரக்கு - அழுங்கல் - இயம்பல் - இமிழ் - குளிறு - அதிர் - குரை - கனை - சிலை - சும்மை - கௌவை - கம்பலை - அரவம் - ஆர்ப்பு - என்னுமிருபத்திரண்டு மோசையென்னு மிசையை யுணர்த்துவனமாம். மாற்றம் - நுவற்சி - செப்பு - உரை - கரை - நொடி - இசை - கூற்று - புகறல் - மொழி - கிளவி - விளம்பு - அறை - பாட்டு - பகர்ச்சி - இயம்பல், என்னும் பதினாறுஞ் சொல்லென்னு மிசையை யுணர்த்துவனவாம். - நன்னூல். - "முழக்கிரட்டொலி கலியிசைதுவை பிளிறிரை, யிரக்கழுங்கியம் பலிமிழ்குளிற திர்குறை, கனைசிலைசும்மை கௌவைகம்பலை, யரவமார்ப்போ டின்னன வோசை." - நிகண்டு. - "மாற்றமே மொழியே கீரேவாணியேகதை யெதிர்ப்புக், கூற்றுரைபனுவலே சொற்குயில் வினாக்கிளவிகாதை, யேற்றிடுநொடியியைத் தோடிசை பறைவாக்குப்பாணி, தோற்றமா நுவலினோடு மூவேழுஞ் சொல்லின்பேரே." இவை மேற்கோள். எ-று. (1) |
|
|