தொடக்கம் | ||
மொழிமுதல் எழுத்துக்கள்
|
||
59. | பன்னீர்-உயிரும் மொழி முதல் ஆகும். | உரை |
60. | உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா. | உரை |
61. | க, த, ந, ப, ம, எனும் ஆவைந்து எழுத்தும் எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே. |
உரை |
62. | சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே- அ, ஐ, ஒள, எனும் மூன்று அலங்கடையே. |
உரை |
63. | உ, ஊ, ஒ, ஓ, என்னும் நான்கு உயிர் `வ' என் எழுத்தொடு வருதல் இல்லை. |
உரை |
64. | ஆ, எ, ஒ, எனும் மூஉயிர் ஞகாரத்து உரிய | உரை |
65. | ஆவொடு அல்லது யகரம் முதலாது. | உரை |
66. | முதலா ஏன தம் பெயர் முதலும். | உரை |
67. | குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். |
உரை |
68. | முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது- அப் பெயர் மருங்கின் நிலையியலான. |
உரை |