தொடக்கம் | ||
புணர்தலின் இயல்பு
|
||
109. | அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய, பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும், பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும், தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும், தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும், மூன்றே திரிபு இடன், ஒன்றே இயல்பு என ஆங்கு அந் நான்கே-மொழி புணர் இயல்பே. |
உரை |
110. | அவைதாம், மெய் பிறிது ஆதல், மிகுதல், குன்றல், என்று இவ்' என மொழிப-திரியும் ஆறே. |
உரை |
111. | நிறுத்த சொல்லும், குறித்து வரு கிளவியும், அடையொடு தோன்றினும், புணர் நிலைக்கு உரிய. |
உரை |
112. | மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் உரியவை உளவே புணர் நிலைச் சுட்டே. |
உரை |
113. | வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும், வேற்றுமை-அல்வழிப் புணர்மொழி நிலையும்,- எழுத்தே சாரியை ஆயிரு பண்பின், ஒழுக்கல் வலிய-புணரும் காலை. |
உரை |