உகர ஈறு
 
255. உகர இறுதி அகர இயற்றே. உரை
   
256. சுட்டின் முன்னரும் அத் தொழிற்று ஆகும். உரை
   
257. ஏனவை வரினே, மேல் நிலை இயல்பே. உரை
   
258. சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே. உரை
   
259. அன்று வரு காலை, ஆ ஆகுதலும்;
ஐ வரு காலை, மெய் வரைந்து கெடுதலும்;
செய்யுள் மருங்கின் உரித்து' என மொழிப.
உரை
   
260. வேற்றுமைக்கண்ணும் அதன் ஓரற்றே. உரை
   
261. எருவும் செருவும் அம்மொடு சிவணி,
திரிபு இடன் உடைய, தெரியும் காலை;
அம்மின் மகரம் செருவயின் கெடுமே;
தம் ஒற்று மிகூஉம் வல்லெழுத்து இயற்கை.
உரை
   
262. ழகர உகரம் நீடு இடன் உடைத்தே;
உகரம் வருதல், ஆவயினான.
உரை
   
263. ஒடு-மரக் கிளவி உதி-மர இயற்றே. உரை
   
264. சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும்;
ஒற்று இடை மிகா, வல்லெழுத்து இயற்கை
உரை