தொடக்கம் | ||
பால்
|
||
2. | ஆடூஉ அறி சொல், மகடூஉ அறி சொல், பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி, அம் முப் பாற்சொல் உயர்திணையவ்வே . |
உரை |
3. | ஒன்று அறி சொல்லே, பல அறி சொல், என்று ஆயிரு பாற் சொல் அஃறிணையவ்வே . |
உரை |
4. | பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும், தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும், 'இவ்' என அறியும் அந்தம் தமக்கு இலவே; உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும் . |
உரை |
5. | னஃகான் ஒற்றே ஆடூஉ அறி சொல் . | உரை |
6. | ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல் . | உரை |
7. | ரஃகான் ஒற்றும், பகர இறுதியும், மாரைக் கிளவி உளப்பட, மூன்றும் நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே . |
உரை |
8. | ஒன்று அறி கிளவி த, ற, ட, ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதி ஆகும் . |
உரை |
9. | அ, ஆ, வ, என வரூஉம் இறுதி அப் பால் மூன்றே பல அறி சொல்லே . |
உரை |
10. | இரு திணை மருங்கின் ஐம் பால் அறிய ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும் தோற்றம்தாமே வினையொடு வருமே . |
உரை |
11. | வினையின் தோன்றும் பால் அறி கிளவியும், பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும், மயங்கல் கூடா; தம் மரபினவே . |
உரை |
12. | ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி ஆண்மை அறி சொற்கு ஆகு இடன் இன்றே . |
உரை |
13. | செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்! . | உரை |
14. | வினாவும் செப்பே, வினா எதிர் வரினே. | உரை |
15. | செப்பே வழீஇயினும் வரை நிலை இன்றே, அப் பொருள் புணர்ந்த கிளவியான . |
உரை |
16. | செப்பினும் வினாவினும், சினை, முதல், கிளவிக்கு அப் பொருள் ஆகும், உறழ் துணைப் பொருளே . |
உரை |
17. | தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரை நிலை இலவே . |
உரை |
18. | இனச் சுட்டு இல்லாப் பண்பு கொள் பெயர்க் கொடை வழக்கு ஆறு அல்ல; செய்யுள் ஆறே . |
உரை |
19. | இயற்கைப் பொருளை 'இற்று' எனக் கிளத்தல்! . | உரை |
20. | செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்! . | உரை |
21. | ஆக்கம்தானே காரணம் முதற்றே . | உரை |
22. | 'ஆக்கக் கிளவி காரணம் இன்றியும் போக்கு இன்று' என்ப-'வழக்கினுள்ளே' . |
உரை |
23. | பால் மயக்கு உற்ற ஐயக் கிளவி தான் அறி பொருள்வயின் பன்மை கூறல்!. |
உரை |
24. | 'உருபு' என மொழியினும், அஃறிணைப் பிரிப்பினும், இரு வீற்றும் உரித்தே, சுட்டும் காலை . |
உரை |
25. | 'தன்மை சுட்டலும் உரித்து' என மொழிப, 'அன்மைக் கிளவி வேறு இடத்தான'. |
உரை |
26. | அடை, சினை, முதல், என முறை மூன்றும் மயங்காமை நடை பெற்று இயலும், வண்ணச் சினைச் சொல். |
உரை |
27. | ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும், ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும், வழக்கின் ஆகிய உயர் சொல் கிளவி; இலக்கண மருங்கின் சொல் ஆறு அல்ல. |
உரை |