தொடக்கம் | ||
இதன்கண் ஆகுபெயர் முடிவு
|
||
114. | முதலின் கூறும் சினை அறி கிளவியும், சினையின் கூறும் முதல் அறி கிளவியும், பிறந்தவழிக் கூறலும், பண்பு கொள் பெயரும், இயன்றது மொழிதலும், இருபெயரொட்டும், வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ, அனை மரபினவே-ஆகுபெயர்க் கிளவி . |
உரை |
115. | அவைதாம், தம்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும், ஒப்பு இல் வழியான் பிறிது பொருள் சுட்டலும், அப் பண்பினவே, நுவலும் காலை வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் . |
உரை |
116. | அளவு நிறையும் அவற்றொடு கொள்வழி உள' என மொழிப, உணர்ந்திசினோரே. |
உரை |
117. | கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும், கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே!. |
உரை |