பக்கம் எண் :

கற்பியல் சூ.6109
 

பொலங்கலஞ் சுமந்த பூண்டாங்கிளமுலை
வருக மாள வென்னுயிரெனப் பெரிதுவந்து
கொண்டனணின்றோட் கண்டுநிலை செல்லேன்
மாசில் குறுமகளெவன்பே துற்றனை
நீயுந் தாயை யிவற்கென யான்றற்
கரைய வந்து விரைவனென் கவைஇக்
களவுடன் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையா
நாணி நின்றோ ணிலைகண்டியானும்
பேணினெனல்லனோ மகிழ்ந வானத்
தணங்கருங் கடவுளன்னோணின்

மகன்றாயாதல் புரைவதாங்கெனவே.”
1
  

(அகம்-16)
  

சிறந்த    செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி  உள்ளமொடு  தன்வரவு அறியாமைப் புறஞ்செய்து
பெயர்த்தல்  வேண்டிடத்தானும்   சிறந்த   செய்கை   அவ்வழித்   தோன்றி-காமக்கிழத்தியது  ஏமுறும்
விளையாட்டுப்  போலாது  தலைவி  தன்   புதல்வனைத்  தழீஇ   விளையாட்டையுடைய  இல்லிடத்தே
தலைவன்  தோன்றி, அறம்புரி  உள்ளமொடு   தன்வரவு   அறியாமைப்  புறஞ்செய்து-அவ்விளையாட்டு
மகிழ்ச்சியாகிய  மனையறத்தினைக் காண விரும்பிய நெஞ்சோடே தன்  வரவினைத்  தலைவி அறியாமல்
அவள்   பின்னே   நிற்றலைச்  செய்து,  பெயர்த்தல்   வேண்டு   இடத்தானும்-தலைவியது  துனியைப்
போக்குதல் வேண்டிய இடத்தும்.
  

‘தன் வரவறியாமை’ என்றதற்குத் தன்னைக் கண்டால்  தலைவியுழை  நின்றார்  தமக்குச்  செய்யும்
ஆசாரங்களையும் அவர் செய்யாமற் கைகவித்துத் தன் வரவு அறியாமை நிற்பனென்று கொள்க.
  

உதாரணம்
  

* “மையற விளங்கிய மணிமருளவ்வாய்தன்
மெய்பெரு மழலையின் விளங்கு பூணனைத்தரப்
பொலம்பிறையுட்டாழ்ந்த புனைவினையுருள்கல
  


1. பொருள் : பக்கம் 85ல் காண்க.
  

* பொருள் : மழலையால் சொட்டும் நீர் அணிகளை  நனைப்ப,  பிறைபோலும் வடிவுடைய பூணின்
முத்து   வடத்தோடு   உருண்ட  சுட்டி  நெற்றியில்  அசைய,   உடுத்திய   துகில்   அவிழ்ந்து 
சதங்கையொலிக்கும் கால்களைத் தடுக்க, பால் முலையை மறந்து முற்றத்திலே