பொன்புரை நரம்பினின் குரற்சீறியா ழெழாஅல்வல்லை யாயினுந் தொழாஅல் புரையோரன்ன புரையுநட்பி னிளையோர் கூம்புகை மருள்வோராங்கு கொண்டுசெல் பாணநின் றண்டுறையூரனைப் பாடுமனைப் பாடல்கூடாது நீடுநிலைப் புரவியும் பண்ணிலைமுனிகுவ விரகில மொழியல்யாம் வேட்டதில்வழியே”1 |
(நற்-380) |
இது பாணனுக்கு வாயின் மறுத்தது. |
“புல்லேன் மகிழ்ந புலத்தலுமிலனே கல்லாயானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குள மடைநீர்விட்டெனக் காலணைந்தெதிரியகனைக் கோட்டுவாளை யள்ளலங்கழனி யுள்வாயோடிப் பகடுசேறுதைத்த புள்ளி வெண்புறத்துச் செஞ்சாலுழவர் கோற்புடைமதரிப் பைங்காற்செறுவினணை முதற்பிறழும் வாணன் சிறுகுடியன்னவென் கோனே ரெல்வளை நெகிழ்த்த நும்மே”2 |
(நற்றிணை-340) |
இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றுழித்தலைவி கூறியது. |
“வெள்ளாங்குருகின் பிள்ளைசெத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை காலையிருந்து மாலைச்சேக்குந் தண்கடற் சேர்ப்பனொடு வாரான் றான்வந் தனனெங் காதலோனே”3 |
(ஐங்குறு-157) |
இது வாயில் வேண்டி ஒழுகுகின்றான் புதல்வன் வாயிலாக வருமெனக் கேட்டு அஞ்சிய தலைவி அவன் விளையாடித் தனித்து |
1. பொருள்: பக்கம் 100ல் காண்க 2. பொருள்: பக்கம் 100ல் காண்க 3. பொருள்: வெள்ளாங்குருகின் குஞ்சைத் தன் குஞ்சு எனக் கருதிப் பார்க்கச் சென்ற நாரை காலையிலிருந்து மாலைவரை அங்கேயே தங்கும்படியான கடற்சேர்ப்பனொடு வாரானாய் தான் மட்டும் தனியே வந்தான் என் மகன். என்னே இது! |