கொல்லோ மென்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லுவோரே”1 |
(குறுந்-79) |
புலம்தரு குரலவாய்ப் புறவினைப்பெடை அழைக்கும் வருத்தங்கண்டு வினை முடியாமல் வருவரோவென அஞ்சியவாறு காண்க. |
“அரிதாயவறனெய்தி” என்னும் (11) கலிப்பாட்டுத் தலைவன் அன்புறுதக்கன கூறக்கேட்ட தலைவி அவற்றைக் கூறிப் புனைநலம் வாட்டுநர் அல்லரென வரவு கருதிக் கூறியவாறு காண்க. இதனுள் ஆற்றுவிக்குந்தோழி வருவர் கொல்லென ஐயுற்றுக் கூறலின்மையின் தோழி கூற்றன்மையும் உணர்க. |
“புல்லுவிட்டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன” (கலி 3.13) |
என்றாற் போல்வன தலைவி கூற்றாய் வருவன உளவாயின் இதன் கண் அடக்குக. |
சிவ |
விளக்கவுரை |
வினைமேற்சென்ற தலைவன் அவ்வினையை முற்ற முடிப்பானோ மாட்டானோ எனத் தலைவி அஞ்சி அதனைத் தோழியிடம் கூறுவள். அஞ்சுதற்குக் காரணம் அவன் சென்ற வழியின் அருமையேயாம். அவன் சென்ற வழியின் அருமை எப்படி இருக்கும் என்பதைத் தலைவி அறிவாள் களவொழுக்கத்தில் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்ட காலத்தில் நடந்து சென்ற வழியின் அருமை அவளுக்குத் தெரியும். அவ்வழியில் புட்களும் விலங்குகளும் அவற்றின் செயல்களும் தலைவன் கண்டு தன்மேல் மிக்க அன்பு சிறந்தற்குக் காரணங்களாயிருந்தன. தன் பிடியை முன்னே குறைந்த நீருண்ணச் செய்து எஞ்சிய சிறிது நீரைப் பின் உண்டகளிறும், ஞாயிற்றின் வெப்பம் தாங்காத வெய்யிலில் வாடிய தன் பிணைமானுக்கு தன் உடம்பு நிழலைத் தந்து ஆற்றிய ஆண்மானும், பெடைகளை அழைக்கும் ஆண் பறவைகளும் பிறவும் கண்ட தலைவன் தன் பால் அன்பு மிகக் காட்டியது அவளுக்கு நினைவில் நின்றது. அதனால் இன்று வினைமேற்சென்ற தலைவன் வழியில் களவுக்காலத்து உடன்போக்கிற் கண்டதுபோலத் தன்பால் அன்புமிகும் படியான காதற்காட்சியினைக் காணநேரின் அது காரணமாக |
1. பொருள்: பக்கம் 137ல் காண்க. |