பக்கம் எண் :

கற்பியல் சூ.517
 
அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்
அந்தரத்து எழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழிகெட ஒழுகலும்
அழியல் அஞ்சல் என்றாயிரு பொருளினும்
தானவட் பிழைத்த பருவத்தானும்
நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப்
1
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித்
தன்னி னாகிய தகுதிக் கண்ணும்
புதல்வற் பயந்த புனிறுதீர்
2 பொழுதின்
நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்
செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்
பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது
3
உயங்குவனள்
4 கிடந்த கிழத்தியைக் குறுகி
அல்கல்
5 முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய இரவினும்
உறலருங் குரைமையின்
6 ஊடல்மிகுத் தோனைப்
பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும்
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
பிரிவு நீக்கிய
7 பகுதிக் கண்ணும்
நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும்
சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியும்
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்
தானவட் பிழைத்த நிலையின் கண்ணும்
உடன்சேறற் செய்கையொ டன்னவை பிறவும்
மடம்பட வந்த தோழி கண்ணும்
8
வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும்
மீட்டுரை வாய்ந்த வகையின் கண்ணும்
அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும்
பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்
காமக் கிழத்தி மனையோள் என்றிவர்

1. மெய்கொள வருளிய-நச். பாடம்  

2. புதல்வர்ப் பயந்த புனிறு சேர்-பாடம்

பாடம் :

3. துணையணை புல்லிய புல்லாது  

4. உயங்கவள்  

5. புல்கென  

6. உறலருங் குண்மையின்  

7.பிரிவின் நீக்கிய  

8. தோழிக்கண்ணும்