பினும் என்பது-பார்ப்பார் கண்ணும் சான்றோர் கண்ணும் மிக்க சிறப்பினையுடைய பிறராகிய அவரவரிடத்தும் ஒழுகும் ஒழுக்கத்தைக் குறிப்பினால் காட்டிய இடத்திலும் என்றவாறு. |
உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. |
ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமர லுள்ளமோ டளவிய விடத்தும் என்பது-ஒழுக்கத் தினுங் களவுக் காலத்து நிகழ்ந்த அருமையைத் தனித்துச் சுழன்ற உள்ளத் தோடே உசாவிய விடத்தும் என்றவாறு.1 |
உதாரணம் வந்தவழிக் காண்க. |
அந்தரத் தெழுதிய வெழுத்தின்மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் என்பது-களவுக் காலத்தொழுகிய ஒழுக்கக் குறைபாட்டான் நிகழ்ந்த குற்றத்தை ஆகாயத்தெழுத்துபோல வழிகெட ஒழுகுதற் கண்ணும் என்றவாறு.2 |
உதாரணம் வந்த வழிக் காண்க. |
அழியல் அஞ்சலென்றாயிரு பொருளினுந் தானவட்பிழைத்த பருவத்தானும் என்பது-அழியல், அஞ்சல் என இயற்கைப் புணர்ச்சிக்கட் கூறிய அவ்விரு பொருளைப் பிழைத்த காலத்தினும் தலைவன்கண் கூற்று நிகழும் என்றவாறு. |
அஃதாவது3 புறப்பெண்டிர் மாட்டுப் பிரிதல். |
“நகுகம் வாராய் பாண பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில் |
1. களவின் ஒழுக்கத்துள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி உள்ளமொடு உசாவி அலமரல் இடத்தும் என இயைக்க. களவுக் காலத்து நிகழ்ந்த அரிய செயல்களை இக்கற்புக் காலத்துத் தனித்திருந்து உள்ளத்தோடு வினவிச்சுழலும் வருத்தத்திடத்தும் எனப் பொருள் கொள்க. |
2. கற்பொழுக்கத்தில் மேற்கொள்ளும் சிறப்புச் செயல்களால் களவுக் காலத்தில் மேற்கொண்ட குற்றமான களவு நிகழ்ச்சிகள் யாவும் உருவில்லாத ஆகாயத்தில் எழுதும் எழுத்து மறைவதுபோல நினைவுக்கு வராதபடி மறக்கப்படும். அப்படி மறக்கப்படுமாறு கற்பொழுக்கம் அமையும் காலத்துக் கூற்று நிகழும். |
3. அஃதாவது-பிழைத்தலாவது, நச், உரை வேறுபாடு காண்க. |