எனத்தான் பராய தெய்வத்தினைத் தோழி கற்புக் காலத்துப் பரவுக் கடன் கொடுத்தற்கு ஏத்திய வழித் தலைவனும் ஏத்துதலாம். |
உதாரணம் |
“அதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த பஃறேனிறாஅ லல்கு நர்க்குதவு நுந்தை நன்னாட்டு வெந்திறன் முருகென நின்னோய்க்கியற்றிய வெறி நின்றோழி யென்வயி நினோக்கலிற்போலும் பன்னாள் வருந்திய வருத்தந் தீரநின் றிருந்திழைப் பணைத்தோள் புணரவந்ததுவே”1 |
தேன் இறாலை அல்குநர்க்கு உதவும் நாடாதலின் நின் நோய்க்கு இயற்றிய வெறி நுமக்குப் பயன்பாடது எமக்குப் பயன்றரு மென்றோன்2 என்வயின் நோக்கலின் என்றது. |
எனக்குப் பயன் கொடுக்க வேண்டுமென்று பராவுதலிற்றோளைப் புணர்ந்து உவந்தது என்றான். இது கற்புக் காலத்துப் பரவுக்கடன் கொடுக்கின்ற காலத்துத் தலைவன் கூறியது. |
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும்-வரைந்த காலத்து மூன்று நாட் கூட்டமின்மைக்குக் காரணமென்னென்று தலைவி மனத்து நிகழா நின்ற வருத்தந் தீரும்படி மிக்க வேட்கையோடு கூடியிருந்து வேதஞ் சொல்லுதலுற்ற பொருளின் கண்ணும்; தலைவன் விரித்து விளங்கக் கூறும்.3 |
அது முதனாள் தண் கதிர்ச் செல்வற்கும் இடைநாள் கந்தருவர்க்கும், பின்னாள் அங்கியங் கடவுட்கும் அளித்து நான்காநாள் அங்கியங் கடவுள் எனக்கு நின்னை அளிப்ப யான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதங் கூறுதலால் எனத் தலைவிக்கு விளங்கக் கூறுதல். உதாரணம் இக்காலத்தின்று. |
1. பொருள்: பக்கம் 23ல் காண்க. |
2. என்றான் என்றிருத்தல் வேண்டும். |
3. இவ்வுரையும் விளக்கமும் ஆரியர்கேற்பன. தமிழ் மரபுக்கு ஏலா. இளம்பூரணர் உரையே கொள்க. ஆரியச் சார்பாக உள்ளவிடங்களிலும் தமிழ் மரபுக்கேற்பக் கொள்க. |