பக்கம் எண் :

54தொல்காப்பியம் - உரைவளம்
 

உறலருங்கு     உண்மையின்1   ஊடல்   மிகுத்   தோளைப்   பிறபிற   பெண்டிரிற்   பெயர்த்தற்
கண்ணும்-தலைவற்குச்  சாந்தழி பெருங்குறி பெற்றார் கூந்தல் துகளும் உண்மையின் அவனைக் கூடுதல்
அருமையினாலே ஊடன் மிகுந்த தலைவியைப் பிற பிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்துதலிடத்தும்
:  என்றது,  உலகத்துத்  தலைவரொடு  கூடுந்  தலைவியர்  மனையறத்து  இவ்வாறொழுகுவரென அவர்
ஒழுக்கங்  காட்டி  அறத்துறைப் படுத்தலாம். மறைவெளிப்படுத்தலும் தமரிற்பெறுதலும் மலிவும் முறையே
கூறிப்  பின்னர்ப் புலவி நிகழ்ந்து ஊடலாய் மிகுதலின் ‘ஊடல் மிகுத்தோள்’ என்றார். இரத்தற்பாலினும்
பெண்பால் காட்டிப் பெயர்த்தலிற் ‘பிற பிற பெண்டிர்’ என்றார்.
  

“புனம் வளர் பூங்கொடி” என்னும் மருதக் கலி (92)யுள்
  

“ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தாளலவுற்று
வண்டின மார்ப்ப விடை விட்டுக் காதலன்
றண்டாரகலம் புகும்”

  

எனக்கூறி,
  

“அன்ன வகையால் யான்கண்ட கனவுத்தான்
நனவாக் காண்டை நறுநூதால் பன்மாணுங்
கூடிப் புணர்ந்தீர் பிரியன்மின் நீடிப்
பிரிந்தீர் புணர்தம்மி னென்பன போல
வரும்பவிழ் பூஞ்சினை தோறுமிருங்குயி
லானாதகவும் பொழுதினான் மேவர
நான்மாடக் கூடன் மகளிருமைந்தருந்
தேனிமிர் காவிற் புணர்ந்திருந்தாடுமா
ரானா விருப்போடணியயர்பு காமற்கு
வேனில் விருந்தெதிர் கொண்டு”
2


1. உறலருங்குரைமையின் என்பதே பாடம். குரை அசைநிலை. உறலருமையின் என்க.
  

2. பொருள் : ஒருத்தி,   புலவியால்  புல்லாதிருந்தாள்; அப்புலவியை இடையில் விட்டுவிட்டுக் காதலன்
மார்பை     முயங்கினாள்.....நன்னுதால்!   குயில்கள்    பூங்கொம்புகளில்    இருந்து    “பல்காலும்
கூடிப்புணர்ந்தவர்களே! பிரியாதீர்கள்; புணர்ச்சி நீட்டிக்கப்பிரிந்தவர்களே இனிக் கூடிப் புணர்வீர்களாக”
என்று  கூறுவனபோலத்  தத்தம்  பெடைகளை அழைக்கும்படியான இளவேனிற் காலத்தில் காமனுக்கு
விழவுவர  மேற்கொண்டு  கூடலிடத்துள்ள  மகளிரும் அவர்  தம் கணவரும் சோலையில் கூடியிருந்து
விளையாட அணிகளை அணிந்தனர்; ஆதலால் பிரிதலும் கூடலும்