“மையற விளங்கிய” என்னும் மருதக்கலி (81) யுள், |
“ஏதப்பா டெண்ணிப்புரிசை வியலுள்ளோர் கள்வரைக் காணாது கண்டேமென் பார்போலச் சேய்நின்று செய்யாத சொல்லிச் சினவனின் னாணை கடக்கிற்பார் யார்”1 |
எனச் சேய் நின்றென்றதனால் துனித்து நின்றவாறும், சினவலென்றதனாற் பிரிவு நீட்டித்தவாறும், நின்னாணை கடக்கிற்பார் யாரென அஞ்சியவாறு கூறியவாறுங் காண்க. |
“பொய்யெல்லா மேற்றித் தவறுதலைப் பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேனருளினி”2 |
(கலி-95) |
என்பதும் அச்சமாதலின் இதன் கண் அடங்கும். |
சென்று கை இகந்து பெயர்த்து உள்ளிய வழியும்: சென்று தலைவன் ஆற்றானாய்த் துனியைத் தீர்த்தற்கு அவளை அணுகச் சென்று, கையிகந்து-அவன் மெய்க்கட் கிடந்த தவறுகண்டு தலைவி ஆற்றாளாய் நீக்கி நிறுத்தலானே, பெயர்த்து - அவன் ஒருவாற்றான் அவளாற்றாமையைச் சிறிது மீட்கையினாலே, உள்ளிய வழியும்-அவள்கூடக் கருதியவிடத்தும் தலைவன் கூற்று நிகழும். |
இதுவுந் துனி தீர்ப்பதோர் முறைமை கூறிற்று. உதாரணம் முற்கூறிய (கலி -81) பாட்டுள், |
“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேன் முதிர்பூண் முலை பொருத வேதிலாள் முச்சி யுதிர் துகளுக்க நின்னாடையொலிப்ப வெதிர் வளிநின்றாய் நீசெல்; |
1. பொருள் : ஊர்மதிலிடத்துக் காவல்புரிவோர்கள் வரைத் தம் கண்களாற் காணாதிருக்கவும் கண்டேம் எனக் கூறுவார் போல நீயும் தொலைவில் இருந்து யான் செய்யாத குற்றத்தைச் செய்தது போலச் சொல்லிச் சினவாதே. நின் ஆணைவழி நிற்பதன்றிக் கடப்பார்யாருளர்?-தலைவன் கூற்று. |
2. பொருள் : நல்லவளே! பொய்யெல்லாம் சேர்த்துக் குற்றங்களை என் தலையில் வைத்து கையோடு கண்டுபிடித்தாய். ஏதோ தவறுடையேன் ஆனேன். இனி அருள்க-தலைவன் கூற்று. |