* கருத்து. ஏடிசேடீ! நீ நம்மனை வாசற்படியை விட்டு வெளியில் போதலைச் செய்தபோது நின்னைப் பார்த்து இப்புதல்வனைத் தேவர் கோயில்களில் அழைத்துச் சென்று வலம் கொள்ளச் செய்துவா என்றேன். நீ அதை விட்டு விட்டாய். காற்றடித்தலால் கிளையினின்றும் காம்பு ஒடிந்து வீழும் மாவடுவில் பால்பிலிற்றுதல்போல் என் முலையைக் கையால் அமுக்கி அரக்கவும் என் கைக்கு அடங்காமல் பருத்துச் சுரந்த முலைப்பால் வீணாகும்படியாக, இவன் தந்தையின் பரத்தையருள் எவள் வீட்டில் இவனைக் கொண்டு சென்றாய்? கூறு என்றாள் தலைவி. அதற்குச் சேடியானவள், நீர்க்கு மேல் உயர்ந்து விரிந்த தாமரையின் கீழ்த் தாமரைப்பூ மலர்ந்தாற்போலக் குடை நிழலில் வரும் நின் மகனைத் தாயர் (பரத்தையர்) பார்த்துவிட்டு, ‘என்னை மதியாது சென்ற தலைவனின் மகனாவான் இவன்’ என்று எண்ணி வீட்டை விட்டு வெளியே வந்து தடுத்தனர். அவர்கள் வீட்டிற் சென்றான் இவன். அதனால் அவர்கள் இவனுக்குக் கைக் காணியாகத் தகுந்த அணிகளை அணிந்தனர் என்றாள். தலைவி மகனை இவன் பரத்தையர் கொடுத்தவற்றை வாங்குவானாம்; சீ, நம்மால் தலைவன் புலத்தற்குரியவன் எனதன் நெஞ்சிற் கூறிக் கொண்டாள். பின்னர் பரத்தையர் நினக்கு இட்ட மோதிரங்களைக் காட்டுக; பார்ப்பேன் என்ன அவன் காட்ட, ஒரு மோதிரம் சுறாமீன் குறித்ததாக இருக்கக் கண்டு இம்மோதிரத்தை பரத்தை |