பக்கம் எண் :

146தொல்காப்பியம் - உரைவளம்
 

உதாரணம்:
  

“இது மற்றெவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இருமருப் பெருமை யீன்றணிக்காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாற்செய் பைம்பயிர் ஆரும் ஊரன்
திருமனைப் பல்கடம் பூண்ட
பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே”
1

(குறுந்-181)
  

எனவரும்.
  

பிழைத்து     வந்திருந்த   கிழவனை   நெருங்கி   இழைத்தாங்   காக்கிக்   கொடுத்தற்   கண்ணும்
என்பது
* -  பிழைத்து   வந்திருந்த   தலைமகனை   நெருங்கித்   தலையளிக்குமாறு  கூறித்  தலைமகன்
மாட்டாக்கிக் கொடுத்தற் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.
  

உதாரணம்:
  

“பகலில் தோன்றும் பல்கதிர்த்தீயின்
ஆம்பலஞ் செறுவில் தேன்ஊர் அன்ன
இவள்நலம் புலம்பப் பிரிய
அனை நலமுடையளோ மகிழ்ந நின்பெண்டே”
2

(ஐங்குறு-57)
  

“கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
மையல் நெஞ்சிற் கெவ்வந்தீர
நினக்கு மருந்தாகிய யான்இனி
இவட்கு மருந்தன்மை நோம்என் நெஞ்சே”
3

(ஐங்குறு-59)
  

எனவரும்.


1. பொருள்: பக்கம் 122ல் காண்க.

* பிழைத்து....கொடுத்தற்    கண்ணும்-பரத்தையிற்   பிரிதலாகிய   பிழையைச்   செய்து   வந்திருந்த
தலைவனையடைந்து தலைவியை அளிக்குமாறு  கூறித் தலைமகளை  அவனிடத்து   உரிமையாக்கிக்
கொடுக்குமிடத்தும்.

2. பொருள்:  ஞாயிறு   போலும்   ஒளிக்கதிருடைய வேள்வித்தீயும் ஆம்பல் மலரும் வயலும் உடைய
தேனூர்  போலும் இவள்  அழகு தனிமையடைந்து வருந்த நீ பிரியும்படியான அத்தகைய அழகையும்
உடையளாவளோ நின் பெண்டு.

3. பொருள்: மகிழ்ந! கேள். வாழி. களவுக் காலத்து ஏற்பட்ட இடையீடுகளால் நீ ஆற்றாயாய் இருந்த