1. பொருள் : ஐய! வீட்டுப் பெட்டைக் கோழியானது மாலைப்பொழுது வந்ததாகத் தம்மையிரையாகவுண்ணக் காட்டுப்பூனைக் கூட்டம் வேலிப்பக்கம் வர அஞ்சிப் புகலிடம் காணாமல் தன் குஞ்சுகளை யாவும் ஒன்றுசேரக் கூடும் பொருட்டு அழைக்கும் ஒலிபோலக் கேட்பதற்கு இன்னாத பழிச் சொற்களோடு எம்வீட்டுத் தெருப்பக்கம் வாரற்க. 2. மரபுடைமாறுபாடு-மரபால் அதாவது குற்றேவல் முறையால் கூறும் எதிர்மறுத்துக் கூறும் கூற்று. அதாவது செலவழுங்குவித்தல். |