இதனை இவளே ஆற்றுவதன்றி யான் ஆற்றுவிக்குமாறென்னை என்றாளென்க. |
அற்றம் அழிவு உரைப்பினும்-களவுக் காலத்துப்பட்ட வருத்தம் நீங்கினமை கூறினார். |
“எக்கர் ஞாழலிகந்துபடு பெருஞ்சினை வீயினிது கமழுந்துறைவனை நீயினிது முயங்குமதி காதலோயே” |
(ஐங்குறு-148) |
“எரிமருள் வேங்கையிருந்த தோகை யிழையணி மடந்தையிற்றோன்று நாட வினிது செய்தனையானுந்தை வாழியர் நன்மனை வதுவை யயரவிவள் பின்னிருங் கூந்தன் மலரணிந்தோயே”1 |
(ஐங்குறு-264) |
அற்றம் இல்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத் தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை முடித்தலின் அப்பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக் கூறும் இடத்தும். |
உதாரணம்: |
“நெஞ்சொடு மொழிகடுத் தஞ்சுவரநோக்குந் தாயவட்டெறுவது தீர்க்கவெம் மகனெச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்து நின்றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே”2 |
“கிழவோற் சுட்டிய தெய்வக் கடம்’ என்று பாடம் ஓதி |
“வாழியாதன் வாழியவினி வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக வெனவேட்டோளோ யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்டுறை யூரன் வரைக வெந்தையுங் கொடுக்க வெனவேட்டேமே”3 |
(ஐங்குறு-6) |
1. பொருள்: பக்கம் 143ல் காண்க. 2. பொருள்: பக்கம் 143ல் காண்க. 3. பொருள்: பக்கம் 144ல் காண்க. |